வீடியோ : பெட்ரூமில் இருந்த பெட்டிக்குள் வந்த உஸ்ஸு உஸ்ஸு சத்தம்.. அலறி ஓடிய குடும்பம்.

By Ajith V

Published:

எப்போதுமே நாம் நம்மை சுற்றியுள்ள இடங்களை சுத்தமாக வைத்திருக்கும் பட்சத்தில் எந்த தீமைகளும் இல்லாமல், உடலுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் மிகுந்த ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் இதைத் தாண்டி ஏதேனும் சுற்றுசூழலில் கவனக் குறைவாக இருந்து வந்தால் பல தீங்குகளும் கூட நம்மை சுற்றி வரலாம்.

அது மட்டுமில்லாமல், நாம் இருக்கும் பகுதியை சுற்றி விலங்குகளின் நடமாட்டம் உள்ளிட்டவை இருந்தால் அவை நாம் வாழும் இடங்களுக்கு நுழைந்து விடாத அளவுக்கு மிக மிக கவனமாகவும் இருக்க வேண்டும். நாம் சிறிதாக ஏதாவது பிழை செய்தால் கூட அவை உள்ளே நுழைந்து ஏதேனும் ஆபத்திற்கு வழி வகுக்கவும் செய்யும்.

இதனிடையே, கர்நாடகாவில் உள்ள வீடு ஒன்றில் பெட் ரூமில் இருந்து கேட்ட சத்தமும், அதன் பின்னர் தெரிய வந்த உண்மையும் பலரை உறைய வைத்துள்ளது. கர்நாடக மாநிலம், அகும்பே என்ற பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தான் தற்போது பலரையும் பதறிப் போக வைத்துள்ளது. அகும்பே என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றின் பெட்ரூமில் ஸ்லாப் ஒன்று அமைந்துள்ளது. அங்கே அதிகம் தேவைப்படாத பொருட்களையும் அந்த வீட்டார் அடுக்கி வைத்துள்ள சூழலில் அதில் ஒரு பெட்டியும் இருந்துள்ளது.

இந்த பெட்டிக்குள் இருந்து திடீரென சத்தம் வருவதை கவனித்துள்ள வீட்டில் இருந்தவர்கள், அதில் பாம்பு இருப்பதைக் கண்டு அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். ராஜ நாகம் (King Cobra) அந்த பெட்டிக்குள் இருக்க உடனடியாக அவர்கள் வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அவர்களும் இது பற்றிய விவரங்களை Agumbe Rainforest Research Station (ARRS) ற்கு பகிர, உடனடியாக சம்பவ இடம் நோக்கி குழு ஒன்றும் விரைந்தது.

கிரி என்ற நபரும், அவருடன் மற்ற சில பேரும் சென்று அந்த ராஜ நாக பாம்பை பை ஒன்றில் அடைப்பதற்கான வழிகளை மேற்கொண்டனர். கருவி மூலம் பாம்பை மெல்ல பிடித்து தாங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பைக்குள்ளும் லாவகமாக போட்டனர். எந்த ஆபத்தும் இல்லாமல் ராஜ நாக பாம்பை பிடித்த ARRS குழுவினர், வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பத்திரமாக காட்டுப் பகுதியிலும் விட்டு விட்டு வந்தனர்.

இது தொடர்பாக மேலும் தெரிய வந்த தகவலின் படி, அந்த ராஜ நாக பாம்பு சுமார் 9 அடி நீளம் இருந்ததாக தெரிகிறது. பாம்பை பிடித்த பின்னர், அப்பகுதி மக்களுக்கு பாம்பை பார்த்தால் எப்படி அந்த சூழலை கையாள வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வையும் அதிகாரிகள் கொடுத்தனர்.

மேலும் உங்களுக்காக...