பாட்டு பாடி முடிச்சதும் விஜயிடம் இருந்து வந்த கிஃப்ட்! அட இது யாருமே சொல்லல

By Chandra R

Published:

கோலிவுட்டில் அனைவரும் விரும்பப்படும் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த திரைப்படமான கோட் திரைப்படம் நாளை அனைத்து திரையரங்குகளிலும் ரிலீஸாக இருக்கின்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகிபாபு , சினேகா, லைலா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளனர். அப்பா, மகன் என இருவேடங்களில் விஜய் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றார். அதற்காக டீஏஜிங் தொழில் நுட்பம் எல்லாம் பயன்படுத்தி மகன் விஜயை வடிவமைத்திருக்கிறார்கள். பிகில் படத்தில் இருந்ததை போல் இந்தப் படத்தில் இருக்கக் கூடாது. மகனுக்கும் அப்பாவுக்கும் வித்தியாசம் தெரியவேண்டும் என்ற காரணத்தினால்தான் டீ ஏஜிங் முறையை பயன்படுத்தினோம் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கூறியிருந்தார்.

படத்தின் பாடல்கள் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றிருக்கிறது. இருந்தாலும் விஜய் படத்தில் எதிர்பார்த்த பாடல்கள் இது கிடையாது என ரசிகர்கள் வருத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். இதையெல்லாம் புரிந்து கொண்ட வெங்கட் பிரபு விசில் போடு பாடல் நீங்கள் கேட்ட பாடல் படத்தில் வராது. வேறொரு வெர்ஷனில் வரும் என்ற ட்விஸ்டை வைத்திருக்கிறார்.

ஸ்பார்க் பாடல் கொஞ்சம் லேட் பிக்கப்பாக இப்போதுதான் டிரெண்டிங்காகி வருகின்றது. கிட்டத்தட்ட 19 மில்லியன் வியூவ்ஸை தாண்டி போய்க் கொண்டிருக்கின்றது. அந்தப் பாடலை கங்கை அமரன் எழுத யுவன் மற்றும் விருஷா பாலு என்ற பாடகி பாடியிருந்தார்கள்.

இந்த நிலையில் பாடகி விருஷா பாலுவுக்கு ஏற்கனவே விஜயிடமிருந்து ஒரு கிஃப்ட் போயிருப்பதாக ஒரு பேட்டியில் அவரே கூறியிருக்கிறார். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜயின் விண்டேஜ் கலெக்‌ஷன் பாடல்களை விருஷா பாலுதான் மேடையில் பாடியிருப்பார்.

vrusha
vrusha

அதை கேட்டதும் விஜய் விருஷா பாலு வீட்டிற்கே மலர் கொத்து மற்றும் ஸ்வீட் பாக்ஸ் வைத்து கிஃப்டாக அனுப்பியிருந்தாராம். அதே போல் ஸ்பார்க் பாடலை கேட்டு எதுவும் கிஃப்ட் கொடுத்தாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...