இந்திய அரசாங்கம் இன்று பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியை அவரது பதவிக்கு ஏற்ற நிலையிலில்லாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி, அந்த அதிகாரி 24 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த முடிவை தெரிவிக்க, பாகிஸ்தான் தூதரகத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான எதிர்வினை அறிக்கையையும் வழங்கியுள்ளது.
மேலும் பாகிஸ்தான் அதிகாரியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இருவரும் உளவுத்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகின்றனர். நம்பத்தகுந்த உளவுத்தகவலின் அடிப்படையில், ஒருவரை கைது செய்தபோது, அவர் இந்திய இராணுவத்தின் நகர்வுகள் குறித்து பாகிஸ்தானில் உள்ள ஒருவருக்கு தகவல் அனுப்பியதாக தெரியவந்தது.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, மேலும் ஒருவரின் தொடர்பும் வெளிப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் தாங்கள் கொடுத்த தகவல்களுக்கு பதிலாக ஆன்லைன் வழியாக பணம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அதிகாரிகள் இதுதொடர்ந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
