திருமணமான ஒரே மாதத்தில் கணவர் மரணம்.. மன உறுதியுடன் ராணுவ வீராங்கனையாக மாறிய சிங்கப்பெண்..!

  ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு இளம்பெண், திருமணமான ஒரே மாதத்தில் சாலை விபத்தில் தனது கணவரை இழந்த நிலையில், மனம் தளராது கடும் முயற்சி செய்து, தற்போது ராணுவ வீராங்கனை ஆக மாறியுள்ளார். இதனை…

sony army

 

ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு இளம்பெண், திருமணமான ஒரே மாதத்தில் சாலை விபத்தில் தனது கணவரை இழந்த நிலையில், மனம் தளராது கடும் முயற்சி செய்து, தற்போது ராணுவ வீராங்கனை ஆக மாறியுள்ளார். இதனை அடுத்து, நெட்டிசன்கள் அவரை “சிங்கப்பெண்” என பாராட்டி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோனி பிஷ்ட் என்பவர், ராணுவ வீரர் நீரவ்சிங்  என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை ஒரே மாதத்திற்குள் முடிவடைந்தது. 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் நீரவ்சிங்   உயிரிழந்தார்.

கணவரின் மரணச் செய்தி கேட்டு, சோனியின் தாய் இதய நோயால் பாதிக்கப்பட்டார். மேலும், அவரது இளைய சகோதரரும் நோயால் பாதிக்கப்பட்டனர். கணவரை இழந்த துயரத்தில், தனது அன்னை மற்றும் சகோதரரின் நிலையும் மோசமாக இருந்தபோதிலும், தனது கணவரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்.

அவரும் ராணுவப் பணியில் சேர வேண்டும் என்ற உறுதியுடன் முயற்சி செய்தார். அவரது தந்தையும் முன்னாள் ராணுவ வீரர் என்பதால், அவரும் ஊக்கம் அளித்தார். அதன் பிறகு, கடினமான பயணத்தை எதிர்கொண்டு, சென்னையில் உள்ள விதவைகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் ராணுவப் பணிக்காக விண்ணப்பித்தார்.

அவருடைய பயணம் மிக எளிதானதல்ல; துயரமும், மனவலிமையும் நிறைந்த ஒரு போராட்டமாக இருந்தது. இதனை அடுத்து, கடந்த மார்ச் 8ஆம் தேதி, அவருக்கு ராணுவ அதிகாரியாக பதவி வழங்கப்பட்டது. பின்னர், சென்னையில் நடந்த அணிவகுப்பில் கலந்து கொண்டு, பதவியை ஏற்றுக்கொண்டார்.

தமது கணவரின் கனவை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், தாய், சகோதரரையும் பாதுகாக்க வேண்டிய கடமையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மன உறுதி மற்றும் தன்னம்பிக்கையுடன் போராடி, கணவரை இழந்தாலும், இன்று ஒரு உயர்ந்த இடத்தை அடைந்துள்ள சோனிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.