விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில், மீனா ஒரு பைனான்ஸ் நிறுவனம் சென்று, பூ அலங்கார பணிக்காக பணம் கேட்கிறார். அங்கு, நன்றியுள்ள நபர், “இரண்டு நாளில் திருப்பித் தருவாய் என்றால், உனக்கு வட்டியில்லாமல் பணம் தருகிறேன்,” என்று கூறி, ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுக்கிறார்.
ஆனால், பின்னர் தெரிய வருகிறது, அந்த நபர், மீனாவுக்கு எதிராக சதி செய்யும் சிந்தாமணியின் கணவர் என்பது புகைப்படம் மூலம் வெளிப்படுகிறது. இதனால், “சிந்தாமணியின் கணவனிடம் மீனா சிக்கிவிட்டாரா?” என்ற அச்சமும் ஏற்படுகிறது.
பணம் கிடைத்துவிட்டதால் இரண்டு லட்சம் ரூபாய் ஆர்டர் பெற்ற திருமண பூ அலங்கார பணியை சிறப்பாக செய்து முடிக்கிறார் மீனா. தனது தோழிகளுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சியாக இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, இரவில் வெளியூர் கார் சவாரியில் சென்றிருக்கும் கணவன் முத்துவிடம், அவர் ரொமான்டிக் கதைகள் பேசுகிறார். முத்துவும் மீனாவின் பூ அலங்கார பணியை பாராட்டி பேசுகிறார்.
அடுத்த நாள், மீனா, பூ அலங்கார பணிக்காக பணம் கேட்க, காண்ட்ராக்ட் கொடுத்தவரிடம் செல்ல அவரோ, “உனக்கு மொத்த பணமும் கொடுத்துவிட்டேன், மீதி பணம் கொடுக்க வேண்டியது இல்லை,” என்று கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் மீனா, “பொய் சொல்லாதீர்கள், தயவுசெய்து என்னுடைய ஒன்றரை லட்ச ரூபாய் மீதி பணத்தை கொடுக்க வேண்டும், இல்லை என்றால் நான் இங்கிருந்து போக மாட்டேன்,” என்று கூறுகிறார். இதை கேட்டு, அந்த காண்ட்ராக்ட் தரகரும் தனது ஆட்களை வைத்து மீனாவை வெளியே தள்ளி விடுகிறார்.
வேறு வழியில்லாமல், அழுதுகொண்டே மீனா வண்டியை எடுத்துக் கொண்டு செல்கிறார். அப்போது, சிந்தாமணி, விஜயாவிடம் போன் செய்து நடந்ததை கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.