இந்தியாவில் குல்பி ஐஸ் விற்கும் முன்னாள் பாகிஸ்தான் எம்பி.. குடியுரிமைக்காக போராட்டம்..!

  பாதுகாப்பற்ற சூழலில் வாழ்க்கை இருந்ததால்பாகிஸ்தானை விட்டு, 2000ஆம் ஆண்டு இந்தியாவுக்கு அகதியாக வந்த திவாயா ராமின் நிலைமை குறித்து ஊடகங்கள் அதிகமாக கவனம் செலுத்துகின்ற்ன. மதச் சித்ரவதையால் பாகிஸ்தானை விட்டு வந்த திவாயா…

pak mp

 

பாதுகாப்பற்ற சூழலில் வாழ்க்கை இருந்ததால்பாகிஸ்தானை விட்டு, 2000ஆம் ஆண்டு இந்தியாவுக்கு அகதியாக வந்த திவாயா ராமின் நிலைமை குறித்து ஊடகங்கள் அதிகமாக கவனம் செலுத்துகின்ற்ன.

மதச் சித்ரவதையால் பாகிஸ்தானை விட்டு வந்த திவாயா ராம், தற்போது இந்திய குடியுரிமையை பெற 2024 மார்ச் 28 அன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தாலும், இன்னும் அவருக்கு குடியுரிமை கிடைக்கவில்லை.

“யாரும் என்னை தடுக்க முடியாது. இராமர் எனக்கு பக்கத்தில் இருக்கிறார்,” என திவாயா ராம் உறுதி கூறுகிறார். திவாயா ராமின் நாள் அதிகவேலை மற்றும் வெயிலின் தாக்கத்தால் சிரமமாக இருக்கிறது. காலை 8 மணிக்கு ஆரம்பித்து, பஸ் நிலையம் அருகில் குல்பி ஐஸ் விற்பனை செய்த பிறகு பள்ளிக்கு அருகே சென்று அங்கு ஐஸ் விற்பனிஅ செய்வார், பிறகு மதிய உணவுக்காக வீடு திரும்பி, பிற்பகலில் மீண்டும் வண்டியுடன் கிளம்புகிறார்.

ஒருகாலத்தில் பெனஜீர் பூட்டோவின் ஆட்சியில் பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திவாயா ராம், அட்டாரி-வாகா எல்லையை கடந்து இந்தியாவுக்கு பரிதாபகரமான முறையில் வந்தார். இருபது வருடங்களுக்கு மேலாக அவர் இந்தியாவில் வாழ்ந்து வரும் நிலையில் குல்பி ஐஸ் விற்கும் வியாபாரியாக தினமும் ரூ.200 முதல் ரூ.250 வரை வருமானம் பெறுகிறார்.

தனக்கு சொந்தமான வண்டி இல்லாத போதிலும், திவாயா ராம் திருப்தியோடு வாழ்கிறார். “நான் முன்பு கடலை விற்றேன், டயர் சரிசெய்தேன். என் வாழ்க்கை ஒரு நீண்ட கதை,” எனப் புன்னகையுடன் கூறுகிறார். “இரண்டு பிறந்த தேதி இருக்கிறது. எனவே என் வயது 70க்கும் 80க்கும் இடையே இருக்கலாம்.”

2000ஆம் ஆண்டு, திவாயா ராம் உட்பட 35 பேர் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்தனர். அதில் 14 பேர் அவருடைய குடும்பத்தினர். அதில் 6 பேருக்கு குடியுரிமை கிடைத்தாலும், திவாயா ராம் மற்றும் அவரது 10 குடும்பத்தினர் இன்னும் காத்திருக்கிறார்கள். தற்போது அவர் 8 மகன்களுக்கும் 4 மகள்களுக்கும் தந்தையாக இருக்கிறார். இவர்களில் ஒருவர் இந்தியாவில் பிறந்தவர்.

1988இல், பாகிஸ்தானின் லையா மற்றும் பக்கர் பகுதிகளில், சிறுபான்மையினர் ஒதுக்கீட்டு தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு சென்றதாக திவாயா ராம் கூறுகிறார். ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.

பாகிஸ்தானில் அவர் எதிர்கொண்ட துன்பங்கள் குறித்து கூறும் திவாயா ராம், “மூன்று நாட்கள் பள்ளிக்குச் சென்றதும் பிறகு வகுப்பில் சக மாணவர்களால் கிண்டலடிக்கப்பட்டதால் கல்வியை விட்டேன். எங்கள் பூர்வீக நிலம் 25 ஏக்கர், அரசால் பறிக்கப்பட்டது,” என கூறுகிறார்.

2024 ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் குடிமக்களுக்கு ‘இந்தியாவை விட்டு விலகுங்கள்’ என்ற அறிவிப்புகளை வழங்கியது. ஆனால் திவாயா ராம், “எங்களுக்கு எந்த நோட்டிஸும் வரவில்லை. போலீசார் வந்து ஆய்வு செய்தார்கள், ஆட்சியர் மற்றும் கிராமத்தினரிடம் விசாரித்தார்கள், நாங்கள் பல வருடங்களாக இங்கே வாழ்கிறோம் என்பதை உறுதி செய்த பிறகு போனார்கள்,” என தெரிவித்தார்.

“நாங்கள் பாகிஸ்தானிலிருந்து ஒழுங்கில்லாத சூழ்நிலைகளை தவிர்த்து வந்தோம் என்பது அனைவருக்கும் தெரியும்,” என்றும், “2014, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன். ஆனால் சில பாகிஸ்தான் ஆவணங்கள் இல்லாததால் பிரச்சனைகள் ஏற்பட்டது,” என்றும் கூறினார்.