நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி.. முதல்வர் சொன்னதை செய்ய முடியாது என்று சொன்னேன்.. முன்னாள் பெங்களூரு கமிஷனர்..

  கர்நாடக முதல்வர் சித்தராமையா சொன்னதை நான் செய்ய முடியாது என்று சொன்னேன் என்றும், அவருடைய பிஏ தன்னை 20 முறைக்கு மேல் மொபைலில் அழைத்த போதும், நான் “உங்கள் முதல்வர் சொன்னதை செய்ய…

police

 

கர்நாடக முதல்வர் சித்தராமையா சொன்னதை நான் செய்ய முடியாது என்று சொன்னேன் என்றும், அவருடைய பிஏ தன்னை 20 முறைக்கு மேல் மொபைலில் அழைத்த போதும், நான் “உங்கள் முதல்வர் சொன்னதை செய்ய முடியாது” என்று சொல்லிவிட்டேன் என்று சொல்லுங்கள் என்றுதான் சொன்னேன் என்றும் கூறினார். “ஒரு தடவை சொல்லிவிட்டால், நூறு முறை சொன்னதற்குச் சமம்” என்று இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

கடந்த 2019 முதல் 2020 வரை பெங்களூரு காவல் ஆணையராக பணியாற்றியவர் பாஸ்கர் ராவ், பெங்களூரில் நடந்த நெரிசல் உயிரிழப்பு சம்பவத்துக்குப் பின்னர் காவல் துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வதை கடுமையாக கண்டித்துள்ளார்.

“முதலமைச்சரின் உத்தரவை நானே ஒரு தடவை மீற வேண்டிய நிலை வந்தபோது, நான் உறுதியான முடிவு எடுத்தேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு சட்டமன்றத் தொடர் நடந்து கொண்டிருந்தபோது, விதான் சௌதாவில் ஒரு நபர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், எதிர்க்கட்சியினர் அவரது உடலை விதான் சௌதாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

முதல்வர் சித்தராமையாவும் அதை செய்யுமாறு என்னை உத்தரவிட்டார். ஆனால் நான் மறுத்தேன். “அதை செய்தால் பெரும் குழப்பம் ஏற்படும், கலவரம் ஏற்படலாம்” என்று கூறிவிட்டேன்.

“அதை எல்லாவற்றையும் நான் சமாளிக்கிறேன், நான் சொன்னதை நீங்கள் செய்யுங்கள்” என்று முதல்வர் சொன்னபோதும், அதை செய்ய முடியாது என்று நான் மீண்டும் மறுத்தேன்.

முதல்வரின் உதவியாளர் என்னை 20க்கும் மேற்பட்ட முறை தொலைபேசியில் அழைத்து அதை செய்யச் சொன்னபோதும், “உங்கள் முதலமைச்சரிடம் சொல்லுங்கள், இது சாத்தியமில்லை” என்று பதில் அளித்தேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் அதன் பின், இறந்த அந்த நபரின் உடலை மருத்துவமனைக்கு விதான் செளதானின் பின்னால் உள்ள வாசல் வழியாக கொண்டு சென்று, அதன் பின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பிரச்சனை எதுவும் வரவில்லை.

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்குப் பிறகு முதல்வர் சித்தராமையா என்னை கடிந்து கொண்டார்.

“நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கடிந்து கொள்ளுங்கள், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், நீங்கள் சொன்னபடி நான் செய்திருந்தால் பெரும் கலவரம் ஏற்பட்டு, துப்பாக்கிச் சூடு வரை நடந்திருக்கும். அப்போது உங்கள் அரசு மீதுதான் குற்றம் சாட்டப்படும். முழு நிர்வாகமும் சீரழிந்ததாக குற்றம் காட்டப்படும். அதைவிட, நீங்கள் திட்டுவதை நான் கேட்பது நல்லது” என்று பதில் அளித்ததாக கூறினார்.

பெங்களூரு கூட்ட நெரிசல் விபத்தில், காவல்துறையினர் ஏற்கனவே “இந்த கொண்டாட்டங்கள் வேண்டாம்” என்று எச்சரித்துள்ளனர். ஆனால், முதல்வர் மற்றும் துணை முதல்வர் அழுத்தத்தினால் தான் இந்த விழா நடந்தது.

தவறெல்லாம் அவர்கள்மீது வைத்து விட்டு, காவல் துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தது மிகவும் மோசமான முன்னுதாரணம். முட்டாள்தனமும் கூட. அதிகபட்சம் இடமாற்றம் செய்திருக்கலாம் அல்லது “விடுமுறைக்கு செல்லுங்கள்” என்று கூறியிருக்கலாம். அதை விடுத்து சஸ்பெண்ட் செய்வது என்பது மோசமான முடிவு.

இதை எதிர்த்து அவர் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.