ரிலீஸ்க்கு முன்பாகவே வெற்றியை உறுதி செய்த Dragon திரைப்படம்…. எப்படி தெரியுமா…?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக இருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். 2020 ஆம் ஆண்டு ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்…

dragon

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக இருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். 2020 ஆம் ஆண்டு ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

அதை தொடர்ந்து ஓ மை கடவுளே படத்தை தெலுங்கில் ஓரி தேவுடா என்ற பெயரில் ரீமேக் செய்தார் அஸ்வத் மாரிமுத்து. தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து Dragon என்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன்க்காக அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் பல நேர்காணல்களில் கலந்து வருகின்றனர். தற்போது Dragon படம் வெளியாவதற்கு முன்னரே அதன் வெற்றியை உறுதி செய்து விட்டது. அது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?

Dragon திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 37 கோடி. ஆனால் தற்போது Non Theatrical Rights மூலமாகவே இந்த படம் லாபத்தை ஈட்டிவிட்டதாம். இனி Theatrical Rights எல்லாமே Extra Profit தான். அதனால் நிச்சயமாக இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் படம் தான் என்று இதன் மூலம் நமக்கு தெரிய வருகிறது.