கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் செனாப் பாலத்தை திறந்து வைத்தார். உலகிலேயே மிக உயரமான பாலம் என்ற பெருமைக்குரிய இந்த பாலம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.
செனால் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதம், காஷ்மீரின் வளர்ச்சியை முடக்க முடியாது” என்றும், “இதனை நான் உறுதி கூறுகிறேன்” என்றும் தெரிவித்தார். மேலும், “காஷ்மீர் ஒரு பயங்கரவாத தளம் அல்ல; திரைப்படங்கள் மற்றும் சுற்றுலா தளம், பசுமை மேடையாக மாறும்” என்றும் உறுதி அளித்தார்.
இதற்கு முன்னர் ரோஜா உள்பட சில படங்கள் காஷ்மீரில் படமாக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் பயங்கரவாதத்தின் தாக்கம் காரணமாக திரையுலகினர் காஷ்மீரை மறந்து விட்டனர். இந்த நிலையில் தான், தற்போது 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள செனாப் பாலம் மீண்டும் திரையுலகினரை ஈர்த்துள்ளது என்பதும், இந்த பாலத்தில் படப்பிடிப்பு நடத்த ஏராளமான தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
எனவே, ஜம்மு காஷ்மீர் மாநிலம் மீண்டும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற அதிக வாய்ப்பு இருப்பதாகவும், சுற்றுலாத்துறை வருமானத்தை உச்சத்திற்கு கொண்டு செல்ல மத்திய மற்றும் மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும், சுற்றுலாத்துறைக்கு ரூ.12,000 கோடி வரை வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.