தியாகத்திற்கு தயாராகிவிட்ட விஜய்.. பாஜகவிற்கு 50 சீட், தவெகவுக்கு 50 சீட்.. உறுதியாகிறது கூட்டணி..!

  விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்து, முதல் தேர்தலை தனித்து போட்டியிட்ட நிலையில் மிகப்பெரிய தோல்வியைத்தான் அடைந்தனர். அதையெல்லாம் பார்த்துத்தான், விஜய் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட…

vijay

 

விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்து, முதல் தேர்தலை தனித்து போட்டியிட்ட நிலையில் மிகப்பெரிய தோல்வியைத்தான் அடைந்தனர். அதையெல்லாம் பார்த்துத்தான், விஜய் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட மாட்டார் என்றும், முதல்வர் ஆசை விஜைக்கும் அவரது கட்சியின் தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் இருந்தாலும், முதல் தேர்தலிலே வெற்றி பெற்று முதல்வராவது என்பது தமிழகத்தை பொறுத்த வரை சாத்தியமில்லை என்பதை விஜய் நன்றாக புரிந்து கொண்டிருப்பதாகவும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

இப்போதைக்கு அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய்யின் கட்சி கூறி வந்தாலும், கடைசி நேரத்தில் தமிழக மக்களின் நலனுக்காக இந்த தியாகத்தை செய்யத் தயார் என்று விஜய் அறிவிப்பார் என்றும், அவர் அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்வார் என்றும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பாஜகவுக்கு 50 தொகுதி, விஜய்க்கு 50 தொகுதி என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவிற்கு வழங்கப்படும் 50 தொகுதிகளில் இருந்து உள் ஒதுக்கீட்டில் ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் உள்ளிட்ட சிலர் சில தொகுதிகளை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மீதமுள்ள 134 தொகுதிகளில் தேமுதிக, பாமக கட்சிகளுக்கு சில தொகுதிகளை பிரித்து கொடுத்துவிட்டு, மீதமுள்ள தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பார்த்தால், 80 முதல் 90 தொகுதிகளில் தான் அதிமுக போட்டியிடும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

அதைப் போலத்தான், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் தொகுதிகளை பிரித்து கொடுக்கும்போது, “கூட்டணி ஆட்சி வேண்டும்” என்பதை வலியுறுத்தும் என்றும், எந்த கூட்டணி வெற்றி பெற்றாலும், இனி நடைபெறும் ஆட்சி கூட்டணி ஆட்சி தான் என்றும் கூறப்பட்டு வருகிறது.