டெல்லியை சேர்ந்த ஒரு டாலன்ட் அக்க்விசிஷன் ஸ்பெஷலிஸ்ட் LinkedIn பக்கத்தில் பகிர்ந்த ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலைக்கு தேர்வாகாத ஒருவரிடமிருந்து வந்த சில மெசேஜ்களின் ஸ்கிரீன்ஷாட்களை அவர் பகிர்ந்திருந்தார்.
ரிதிகா அக்னிஹோத்ரி, Depex Technologies என்ற நிறுவனத்தில் பணியாற்றுபவர். அவர் வேலை தேடிய ஒருவரிடமிருந்து வந்த WhatsApp செய்தி மற்றும் ஆடியோ அழைப்புகளின் ஸ்கிரீன்ஷாட்களை LinkedIn பக்கத்தில் பகிர்ந்தார். இதை பார்க்கும்போது, அந்த விண்ணப்பதாரர் முதலில் feedback கேட்க தொடர்பு கொண்டதாக கூறியிருந்தார். அதற்கு அவர், நீங்கள் தகுதியற்றவராக இருப்பதால் தேர்வு செய்யப்படவில்லை என்று பதிலளித்தார்.
ஆனால் அதற்கு பதிலாக, அந்த நபர் ஒரு காதல் ஷாயரியை அனுப்பினார். பின்னர் அவருக்கு அழைக்கவும் முயன்றார், ஆனால் ரிதிகா அதற்கு பதிலளிக்கவில்லை.
இரண்டாவது ஸ்கிரீன்ஷாட்டில், ரிதிகா அவரது அழைப்புகளை பதிலளிக்காமல் விட்டதையடுத்து, அந்த நபர் தனது மெசேஜில், “நான் இன்டர்வியூக்கு வந்தேன், உங்களை பார்த்ததும் நீங்கள் அழகாக இருந்தீர்கள், உங்கள் அழகு என்ன சொக்க வைத்தது” என குறிப்பிட்டு, மேலும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் எழுதியிருந்தார்.
இந்த பதிவு விரைவில் வைரலானது. பலரும் அந்த நபர் உண்மையிலேயே தகுதியற்ற நபர் தான் என்று கூறி அவரது மரியாதையின்மையை கடுமையாக விமர்சித்தனர்.
ஒருவர் கருத்து அளிக்கும்போது, “இவர் வேலை தேடவில்லை போல இருக்கிறார்… வேறு நோக்கத்தில் இருக்கிறார் போல… உண்மையில் தேவைப்படுபவர்கள் இப்படிப் பைத்தியக்கார மாதிரி நடந்துக்க மாட்டாங்க…”
மற்றொரு பயனர், “இந்த மாதிரியான சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நீங்கள் அவரை பிளாக் செய்தது சரியான முடிவுதான். எப்போதும் ஸ்க்ரீன் செய்ய கம்பெனியின் எண்ணை மட்டும் பயன்படுத்துங்கள். நேரடியாக தொடர்பு கொள்ள அனுமதிக்க வேண்டாம்” என குறிப்பிட்டார்.
மற்றொரு பயனர், “இவர்கள் மீதான தகவல்களை வெளிப்படையாக வெளியிடவேண்டும். பிளாக் செய்வது மட்டும் போதாது. இதேபோல் வேறொருவர் இவ்வாறு செய்வதை தடுக்கும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். இவர்களின் வாழ்க்கை பாதிக்குமோ என்று சிலர் கூறலாம். ஆனால் நடவடிக்கை எடுக்காதால், இது தொடர்ந்து நடக்கும்” என்றார்.
மற்றொரு பயனர், “அடுத்த முறை இந்த மாதிரி செய்யும் ஒருவரை வேலைக்கு எடுத்து, ஒரு மாதத்துக்குள் நோட்டீஸ் இல்லாமலேயே வேலையை விட்டு அனுப்பி விடுங்கள்” என கேலி செய்தார்.
இது மாதிரி ஒரு சம்பவம் இது முதல்முறை இல்லை. கடந்த அக்டோபரிலும், டாலன்ட் அக்க்விசிஷன் ஸ்பெஷலிஸ்ட் ஹர்ஷிதா மிஸ்ரா, வேலைக்கு தேர்வு செய்யப்படாத சில வேட்பாளர்கள், அவரிடம் அனுப்பிய சர்ச்சைக்குரிய மெசேஜ்களின் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து இருந்தார்.