பாகிஸ்தான் விமானங்கள் எத்தனை அழிந்தது என ஒருமுறையாவது ராகுல் காந்தி கேட்டாரா? பாஜக கடும் விமர்சனம்..

  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் இந்திய விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நோக்கி கேள்வி எழுப்பிய நிலையில், பாஜக ஐ.டி.செல் தலைவர்…

rahul1

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் இந்திய விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நோக்கி கேள்வி எழுப்பிய நிலையில், பாஜக ஐ.டி.செல் தலைவர் அமித் மால்வியா அவரை கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகச்சிறப்பான ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காமல், ராகுல் காந்தி எத்தனை விமானங்களை இந்தியா இழந்ததை என்பதை தெரிந்து கொள்ளூம் குறிக்கோளாக வைத்திருப்பது ஆச்சரியமல்ல. ஏனெனில் இந்த பேச்சு பாகிஸ்தான் மற்றும் அதன் ஆதரவாளர்களின் மொழியில் பேசுவதாக அர்த்தம்.

இந்திய ராணுவ படையினரின் செய்தி அளிப்பில் ஏற்கனவே விமான இழப்புகள் பற்றி கூறப்பட்டுவிட்டது. ஆனால் பாகிஸ்தானின் எத்தனை விமானங்கள் வீழ்த்தப்பட்டன, எத்தனை விமானங்கள் தரையில் நின்றபடியே அழிக்கப்பட்டன என்ற கேள்வியை அவர் ஒருமுறை கூட எழுப்பவில்லை.”

ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் செய்தி நிறுவனங்களில் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட புகழைப் பார்த்தால், அடுத்ததாக அவருக்கு ‘நிஷான்-ஏ-பாகிஸ்தான்’ விருது கிடைக்கும் வாய்ப்பு உண்டு என கேலி செய்தார்

“இது புதிதல்ல. கடந்த காலத்திலும் பாகிஸ்தானின் ஊடகம், ராகுல் காந்தியின் பேச்சுக்களை புகழ்ந்து தங்களது பயங்கரவாத ஆதரவை மறைக்கும் முயற்சியை செய்திருக்கிறது. இவருடைய அறிக்கைகள் எப்போதும் எல்லைக்கடந்த பயங்கரவாதத்துக்கு பாதுகாப்பாக மாறிவிடுகிறது. அவருடைய அரசியல் எப்போது நாட்டுப்பற்றுக்கு இடம் கொடுக்கப்போகிறது? ராகுல் காந்தி இன்றைய மிர் ஜாஃபராகவே உள்ளார்,” என்றார். மிர் ஜாஃபர் என்பது இன்றைய அரசியல் மற்றும் சமூக உரையாடல்களில் ‘துரோகி’, என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.