கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்.. பிச்சைக்காரர் போல் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு ரூ.15 கோடி அனுப்பிய நபர்..!

  ராஜஸ்தானின் பெலா கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை சிக்ரி போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் SIM கார்டை பயன்படுத்தி மோசடி செய்து, அந்த பணத்தை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்கிறார். அவரிடம் இருந்து ரூ.15 கோடி பரிவர்த்தனை…

rs.15 crore

 

ராஜஸ்தானின் பெலா கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை சிக்ரி போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் SIM கார்டை பயன்படுத்தி மோசடி செய்து, அந்த பணத்தை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்கிறார். அவரிடம் இருந்து ரூ.15 கோடி பரிவர்த்தனை நடந்திருக்கும் மொபைல் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவரை அசாம் மாநிலத்தின் சிறப்பு படை கைது செய்தது.

ஜம்மு-காஷ்மீர் பஹால்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா–பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்ற நிலையில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ முயற்சியில் இந்த கைது நடந்தது. தீக் மாவட்டத்தின் சிக்ரி பகுதியில் பாகிஸ்தான் SIM மூலம் மோசடி செய்து, அந்த பணத்தை பாகிஸ்தானுக்கு அனுப்பிது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்த மொபைலில் மட்டும் ரூ.15 கோடி பரிவர்த்தனைகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் தோற்றத்தில் பிச்சைக்காரர்கள் போலவே தெரிந்தாலும், நம்பிக்கையை துரோக செயலை செய்துள்ளதால் தோற்றத்தை வைத்து ஒருவரை எடை போட கூடாது என்றும் கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஏனெனில், பிச்சைக்காரராக இருந்தாலும் சரி, அல்லது அழகான யூடியூபராக இருந்தாலும் சரி, மத்தியப் பிரதேசம் சேஹோர் மாவட்டத்திலுள்ள ஆசிரியராக இருந்தாலும் சரி இவர்கள் அனைவரின் நோக்கும் நாட்டுக்கு எதிரானதாகவே உள்ளது.