இந்த நிலையில் இந்த ஆண்டில் FASTagக்கு பதிலாக GNSS அடிப்படையில் கட்டணம் பயன்படுத்த இருப்பதால், இந்த மாற்றத்தின் காரணமாக குளோபல் நேவிகேஷன் செயற்கைக்கோள் அமைப்பை (GNSS) அடிப்படையாகக் கொண்ட கட்டணம் குறைக்கப்பட இருப்பதாகவும், கட்டண குறைப்பு குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
குளோபல் நேவிகேஷன் செயற்கைக்கோள் அமைப்பு மூலம் இனி வாகனங்கள் GNSS டிவைஸ்களால் கண்காணிக்கப்படும். பயணித்த தொலைவுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது இருக்கும் கட்டண சாவடிகள் அகற்றப்படும் என்பதால் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை, போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் உள்ளூர் பயணிகளுக்கு தினமும் 20 கிமீ கட்டண விலக்கு வழங்கப்படும்.
இந்த திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ISRO தொழில்நுட்ப ஆதரவுடன் செயல்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி பசுமை போக்குவரத்து வளர்ச்சி பற்றிய தமது திட்டத்தையும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அதன்படி ஹைபிரிட் வாகனங்களுக்கு 5% ஜிஎஸ்டி, ஃப்ளெக்ஸ் இன்ஜின் வாகனங்களுக்கு 12% ஜிஎஸ்டி மற்றும் இன்னும் சில ஆண்டுகளில் 36 கோடி பெட்ரோல்/டீசல் வாகனங்களை ஒழிக்கும் திட்டம் ஆகியவையும் நிதியமைச்சகம் பரிசீலனை செய்யும் நிலையில் உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், இரண்டு வாரங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் நெடுஞ்சாலை பயண அனுபவத்தில் புதிய புரட்சியை உருவாக்கும் எனவும், குறைந்த செலவு, சீரான பயணம் மற்றும் நவீன சாலை கட்டமைப்பு என ஒரு முழுமையான மாற்றத்தை நோக்கி இந்தியா நகர்கிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.