இதுவே என் கட்டளை.. விஜயா ருத்ரதாண்டவம்.. பதுங்கும் ரோகிணி பாய்வது எப்போது?

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி, தன்னுடைய தோழிக்கு மணமகள் மேக்கப் போட வேண்டும் என்று ரோகிணியிடம் கேட்கிறார். அதற்கு ரோகிணி அமைதியாக யோசிக்கிறார். பின்னர்,…

sa3 1

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி, தன்னுடைய தோழிக்கு மணமகள் மேக்கப் போட வேண்டும் என்று ரோகிணியிடம் கேட்கிறார். அதற்கு ரோகிணி அமைதியாக யோசிக்கிறார். பின்னர், “ஆண்ட்டி அனுமதி கொடுத்தால் நான் வருகிறேன்” என்று சொல்கிறார். அதற்கு ஸ்ருதி, “நாம் எப்போது, என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். இன்னொருவரிடம் அனுமதி கேட்கக் கூடாது” என்று பதிலளிக்கிறார்.

மீனாவும், “நான் பூ விற்க போகக்கூடாது என்று எனக்கு இடைஞ்சல் கொடுத்தார்கள். ஆனாலும் என்னுடைய வேலையை நானே பார்த்துக் கொண்டு செய்து வருகிறேன். அதனால்தான் வளர்கிறேன். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று சொல்கிறார். ஆனால் ரோகிணி, ’ஆன்ட்டி என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்பேன். அவர் அனுமதி கொடுத்தால் தான் வருவேன்” என்று பதிலளிக்கிறார்.

இதை கேட்டு அண்ணாமலை அதிர்ச்சி அடைந்து விஜயாவிடம்  “நீ ரோகிணியை வேலைக்குப் போகக்கூடாது என்று சொன்னாயா?” என்று கேட்க, “என் பையனுடைய கடைக்குப் போக கூடாது என்றுதான் சொன்னேன். என்னுடைய பையன் கடைக்குப் ரோகிணி போகக்கூடாது. அவன் கண்டிப்பாக தனியாக கடையை பார்த்துக் கொள்வான். ரோகிணி என் பையன் கடைக்குப் போகக்கூடாது, இது என் கட்டளை” என்று அவர்  கூறுகிறார்.

அதைப் பார்த்து ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இதையடுத்து மனோஜிடம், “நீ எந்த காரணத்துக்காக ரோகிணியை கடைக்கு வரச் சொல்லக்கூடாது என்று சொல்ல,  மனோஜ் ஒரு நொடியும் யோசிக்காமல் ’சரிம்மா’ என்று சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.

இதைப் பார்த்து முத்து மற்றும் மீனா கருத்து தெரிவிக்க, ரோகிணி, “என்னுடைய விஷயத்தில் நீங்கள் தலையிடாதீர்கள். எனக்கு ஆண்ட்டி சொல்வதுதான் முக்கியம். அவர் சொல்வதைத்தான் நான் செய்வேன்” என்று கூறுகிறார்.

இந்த நிலையில், சீதா மற்றும் அருணின் சில ரொமான்ஸ் காட்சிகள் நடக்கின்றன. சீதா அருணின் வீட்டிற்கு வந்து அவருடைய அம்மாவிடம் பேசுகிறார். அருணின் அம்மாவும் அவளை நன்றாக உபசரிக்கிறார். பின்னர் அருணிடம் தனியாக சென்று, “சீதா எப்போது என் மருமகளாக வருவாள்? சீக்கிரம் அவளிடம் சொல்லுங்கள்” என்று கேட்கிறார்.

அதற்கு அருண், “நான் என் காதலை உங்களிடம்  சொல்லிவிட்டேன் என்பது சீதாவுக்கு தெரியாது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இப்போது தான் டெஸ்ட் வைத்திருக்கிறாள். அந்த டெஸ்டில் பாஸ் ஆனவுடன், அவர் நிச்சயம் உன் மருமகள்” என்று பதிலளிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, சீதாவை வண்டியில் ஏற்றி அவளை வீட்டில் விட்டு வருகிறேன்” என்று அழைத்துச் செல்கிறார். வண்டியில் செல்லும் போதும் இருவரும் ரொமான்ஸாக பேசிக்கொள்கிறார்கள்.

இதே நேரத்தில், முத்து, செல்வம் மற்றும் முருகன் ஆகியோர் ஒரு கடையில் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த கடை அருகேதான் அருண், சீதாவை இறக்கி விடுகிறார். ஆனால், முத்து, சீதாவை பார்ப்பதற்குள் அருண் அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார்.

அதே நேரத்தில், அருண் பைக்கில் சீதா செல்வதைக் கண்டு மீனா அதிர்ச்சி அடைகிறார். “அருண், சீதா காதல் மீனாவுக்கு தெரிந்து விட்டதால், அதன்பின் சில வாக்குவாதங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டிற்கு வருகிற சீதா தன் அம்மாவிடம் அன்பு காட்டுகிறார். அவர் சாப்பிடவில்லை என்றதும், கோபித்துக் கொண்டு சாப்பாட்டை எடுத்து அவருக்கு ஊட்டும் காட்சியுடன் இன்றைய எபிசோட் முடிகிறது.

நாளைய எபிசோட்:

மேக்கப் பணியை முடித்துவிட்டு வரும் ரோகிணியிடம், “எவ்வளவு பணம் கிடைத்தது?” என்று விஜயா கேட்க, அதற்கு ரோகிணி 25,000 ரூபாய் கிடைத்தது என்று கூறுகிறார். அந்த பணத்தை என்னிடம் கொடு” என்று விஜயா கேட்க அதற்கு ரோகிணி , “அது அக்கவுண்டில் தான் போடுவார்கள்” என்று  பதிலளிக்க, “அப்படியானால் உன்னுடைய ஏடிஎம் கார்டை என்னிடம் கொடு, அதை நான்தான் வைத்திருப்பேன்” என்று கூற, ரோகிணி மீண்டும் அதிர்ச்சி அடைவதுடன் நாளைய புரோமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.