இப்போ தரையில உட்காருவதையே கேவலமாக நினைக்கிறாங்க. ஏன்னா காலை மடக்கி சம்மணம் போட்டு உட்காரணும். அது கொஞ்சம் அசௌகரியமா இருக்கும். பட்டிக்காடு மாதிரியும் ஒரு பிம்பத்தை உண்டாக்கும். அதனால ஸ்டைலா சேர்ல தான் உட்காருறாங்க. சாப்பிடும்போது கூட டைனிங் டேபிள்தான்.
ஏன் டாய்லட்னா கூட யுரோப்பியன்தான். ஏன்னா அவங்களால தரையில சுக ஆசனத்தில் உட்கார முடியல. தவியாய் தவிக்கிறாங்க. சம்மணம் போடுறதால எவ்ளோ பிரயோஜனம்? சாப்பிடும்போது என்னவெல்லாம் செய்யணும்னு வாங்க பார்க்கலாம்.
உங்களால சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள். யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்.. கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்.
சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்.. சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.
நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள். பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க. போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்.. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்..
பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்.. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம். ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும். இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம். சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்.
பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்..சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்.. சாப்பிட வேண்டிய நேரம். காலை – 7 to 9 மணிக்குள். மதியம் – 1 to 3 மணிக்குள். இரவு – 7 to 9 மணிக்குள். சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்கñ வேண்டும். சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள். சம்மணமிட்டு அமருங்கள்