ரொம்ப களைப்பா இருக்கா? அடிக்கடி தலைவலியா? தலை முடி உதிர்வா? எல்லாத்துக்கும் ஒரே தீர்வு இதுதான்…!

By Sankar Velu

Published:

ரத்தத்தை சுத்தம் செய்வதால் நமக்கு பல நன்மைகள் உண்டாகின்றன. உடலில் ஓடக்கூடியய சிவப்பு நிற திரவம். இதனோட முக்கியமான வேலை என்னன்னா செல்களுக்கு கொண்டு போய் தேவையான சத்துக்களையும், ஆக்சிஜனையும் தருவது தான்.

ரத்தத்தோட இன்னொரு முக்கியமான வேலை என்னன்னா செல்களில் தேங்கி நிற்கும் கழிவுகளையும் சுத்தம் செய்கிறது. நம் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாக இருந்தால் தான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

blood circulation1
blood circulation1

ரத்தத்தை சுத்தமாக்குவதற்கு நுரையீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இதயத்தில் இருந்து சுத்தமான ரத்தத்தை உடலில் இருக்கக்கூடிய அனைத்துப் பாகங்களிலும் ரத்த நாளங்களின் மூலமாக கடத்துகிறது.

அதுபோல உடலில் உள்ள அனைத்துப்பாகங்களிலும் இருந்து அசுத்த ரத்தத்தை இதயத்தின் வலது பாகத்திற்குக் கொண்டு செல்கிறது. நாம் சுவாசிக்கும்போது ஆக்சிஜனை உள்ளிழுக்கிறோம்.

lungs
lungs

இந்த ஆக்சிஜன் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு ரத்தம் ஆக்சிஜனோடு கலந்து சுத்தமான ரத்தமாகிறது. அதனால நல்ல காற்றை நாம் சுவாசிக்க சுவாசிக்க ரத்தம் தூய்மை அடைகிறது.

இது இயற்கையில் நாம் எதுவும் செய்யாமலேயே ரத்தம் சுத்தமாகிக்கொண்டே இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. தோல் நோய், இதய நோய், அடிக்கடி தலைவலி, தலை சுற்றல், தலைமுடி உதிர்தல், இளமையில் முதுமையான தோற்றம் இதெல்லாம் ரத்தம் அசுத்தமாக இருப்பதால் தான் உண்டாகின்றன.

உணவை சரியாக எடுத்துக் கொண்டால் ரத்தத்தை சுத்தமாக்க முடியும்.

பீட்ரூட்டில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் மிக அதிகம். வைட்டமின் ஏ, சி, மக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட், நார்ச்சத்து என பல சத்துக்கள் அடங்கிய ஒரு சாதாரண காய்கறி தான் பீட்ரூட். இதில் உள்ள நிறமிகள் கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

beetroot
beetroot

ரத்தத்தை சுத்தம் செய்து உடல் முழுவதும் ஓட உதவி செய்கிறது. இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. வாரம் ஒருமுறையாவது சாப்பிட வேண்டும். பீட்ரூட் சாறும் குடிக்கலாம்.

முட்டைக்கோஸ் உடன் சிறுபருப்பு சேர்த்து காரம் சேர்க்காமல் காலை அல்லது மதிய உணவாக எடுத்துக் கொள்ளலாம். எந்த உணவாக இருந்தாலும் பூண்டு சேர்த்துக்கொள்ளுங்கள். இது சிறந்த மருந்தாக நமக்கு பயன்படுகிறது. கேரட் ரத்த ஓட்டத்திற்கு சிறந்த மருந்து. பெருநெல்லிக்காயில் நிறைய இரும்புச்சத்து உள்ளது. இது ரத்த ஓட்டத்திற்கு ரொம்பவே உதவி செய்கிறது.

Apple
Apple

ஆப்பிள் வாரத்திற்கு ஒருமுறையாவது சாப்பிடுங்க. இது ரத்தத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. நாவல்பழத்தில் நிறை இரும்புச்சத்து உள்ளது. இது ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து உள்ளது. ஹீமோகுளோபின் அதிகமாக தரக்கூடிய கீரை இதுதான்.

பச்சை நிற காய்கறிகளை அனைத்தையும் சாப்பிடலாம். மாதத்திற்கு ஒருமுறையாவது வேப்பங்கொழுந்தை நல்லா அரைத்து ஒரு சிறு உருண்டையாகக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

புதினா டீ குடித்தால் ரொம்ப நல்லது. உடற்சோர்வு உடனே நீங்கும். கீழாநெல்லி இலை ரத்தத்தில் உள்ள அழுக்கை நீக்குகிறது. பால் உடன் மஞ்சள் பொடி சேர்த்து குடித்தால் ரொம்பவே ஆரோக்கியமானது. மஞ்சள் சிறந்த கிருமிநாசினி. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

 

 

 

 

 

Leave a Comment