இன்றைய காலகட்டத்தில் உயிரிழப்புகள் என்பது எதிர்பாராத விதமாக அதிகப்படியாக நடக்கிறது. அதில் மாரடைப்பு ஏற்படுவதால் நிகழும் உயிரிழப்பு அதிகம். அதற்கு காரணம் இன்றைய உணவு பழக்க வழக்க முறைகள் ஆகும். முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை சிறுதானியங்களை சாப்பிட்டு வந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்திலோ எங்கு பார்த்தாலும் ஃபாஸ்ட் ஃபுட் மயமாக இருக்கிறது.
அதன் காரணத்தினால் உடல் பருமன் புற்றுநோய் போன்ற பலவித வியாதிகள் ஏற்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஒரு சில உணவுப் பொருட்கள் மாரடைப்பு வருவதை அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது.அது என்ன உணவு பொருள் என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் அதை சாப்பிடுவீர்கள் ஆனால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.
மாரடைப்பு அதிகம் ஏற்படக்கூடிய சாத்திய கூறுகளை அதிகப்படுத்தும் உணவுகளாக கூறப்படுவது இனிப்பும் உப்பும் நிறைந்த உணவுகள் ஆகும். அதாவது பிஸ்கட், பிரட், வெண்ணெய், கேரமல் போன்ற உணவுப் பொருட்களில் இனிப்பும் உப்பும் இணைந்து சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் உப்பு உடம்பில் உள்ள சோடியம் அளவை அதிகரிக்க செய்து மாரடைப்பு ஏற்படுத்த வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிப்ஸ், சீஸ், சாஸ் போன்ற உணவு பொருட்களை அதிகப்படியாக சாப்பிடும் போது அதில் சேர்க்கப்படும் உப்பு சத்து உடம்பை பாதித்து உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுகிறது. இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அதனால் இது போன்ற உணவுகளை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.