சமீபகால வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் மக்கள் கடுமையான நோய்களுக்கு ஆளாகிறார்கள். இவற்றில் ஒன்று இதய நோய். இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால், ரத்தம் உறையத் தொடங்குகிறது, இது மாரடைப்பு போன்ற இதயப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 7 வாழ்க்கை முறை மாற்றங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சோடியம் நமது உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் அதை அதிகமாக எடுத்துக் கொண்டால் கடுமையான உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிகப்படியான சோடியம் ரத்த நாளங்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது ரத்த அழுத்தத்தை அதிகரித்து மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற அபாயத்தை ஏற்படுத்துகிறது.
அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள்: உங்கள் இதய ஆரோக்கியத்தை உடனடியாக மேம்படுத்துவதற்கான ஒரு வழி, அதிக காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது.
உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது என்பது இதய ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க உதவும் ஒரு முக்கிய படி. தினமும் உடற்பயிற்சி செய்வது இதயத்திற்கு அதிக ரத்தத்தை பம்ப் செய்ய உதவுகிறது மற்றும் இதய தசைகளை வலுப்படுத்துகிறது.
இஞ்சி மற்றும் பூண்டு ஆகிய இரண்டும் கொழுப்பு, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் இயற்கை மூலிகைகள். பூண்டு பெரும்பாலும் இதய நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது,
இஞ்சி ஒரு வலி நிவாரணி மட்டுமல்லாது, ஆண்டிபிரைடிக், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே இஞ்சியை சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மன அழுத்தம் இதய நோய்க்கான முக்கிய காரணம். இதயத்தை பராமரிக்க, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். நல்ல தூக்கமானது உடல் பருமன், அதிக எல்டிஎல், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.