செட்டிநாட்டு விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கும் சுவையான கவுனி அரிசி பொங்கல்.. செய்வது எப்படி?

Published:

விருந்து என்றாலே கட்டாயம் அதில் ஒரு இனிப்பு பண்டம் இடம் பிடித்து விடும். பலகாரங்கள் மற்றும் உணவு வகைகளுக்கு பெயர் பெற்ற செட்டிநாட்டில் விருந்துகளில் இடம்பெறக்கூடிய ஒரு இனிப்பு வகை தான் கவுனி அரிசி பொங்கல். இதை செய்ய அதிக பொருட்கள் தேவையில்லை அதே சமயம் செய்வதற்கும் மிகவும் எளிமையானது. சுவையாகவும் அதேசமயம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையும் தரக்கூடிய இந்த கவுனி அரிசி பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

 

images 4 6

பலரும் அறியாத கருப்பு கவுனி அரிசியின் 15 பலன்கள்…!

கவுனி அரிசி பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:

  • கவுனி அரிசி – ஒரு கப்
  • தண்ணீர் – 3 கப்
  • சீனி – ஒன்றரை கப்
  • தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
  • நெய் – இரண்டு ஸ்பூன்

கவுனி அரிசி பொங்கல் செய்யும் முறை:

கவுனி அரிசியை நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

முதல் நாள் இரவே கவுனி அரிசியை தண்ணீரில் ஊறவைத்து விடவும் குறைந்தது 8 முதல் 10 மணி நேரங்களுக்கு மேல் ஊற வேண்டும்.

மறுநாள் ஒரு குக்கரில் ஊறிய கவுனி அரிசி ஒரு கப் சேர்த்து அதனுடன் மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.

குக்கரில் நான்கு அல்லது ஐந்து விசில் விட்டு கவுனி அரிசியை வேக வைக்கவும்.

குக்கரில் விசில் அடங்கியதும் வெந்த கவுனி அரிசி சூடாக இருக்கும் பொழுது ஒன்றரை கப் சர்க்கரை சேர்த்து கிளறவும்.

அதன் பின் நெய் மற்றும் தேங்காய் பூ சேர்த்து கிளறி சூடாக பரிமாறலாம். விரும்பினால் ஏலக்காய் ஒன்று சேர்த்துக் கொள்ளலாம்.

அவ்வளவுதான் எளிமையாக சத்தான சுவையான கவுனி அரிசி பொங்கலை தயார் செய்து விடலாம்.

மேலும் உங்களுக்காக...