வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட சமந்தா! ட்ரோல் செய்து வரும் ரசிகர்கள்!

By Velmurugan

Published:

தென்னிந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகியான சமந்தா, தற்பொழுது தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் படத்தின் இரண்டாவது சிங்கிள் “ஆராத்யா” வெளியாகியுள்ளது.

ஷிவா நிர்வாணாவின் இயக்கத்தில், ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்த குஷி திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படம் செப்டெம்பர் 1ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ளது.

சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் ஆராத்யா பாடலை கொண்டாடி வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் அதிகப்படியான பார்வையாளர்களையும் பாடல் கவர்ந்து வருகிறது .

தற்பொழுது குஷி படத்தில் உள்ள “ஆராத்யா” பாடலின் சில ஸ்டில் மூலம், சமந்தா மீண்டும் ட்ரோல்களுக்கு ஆளாகியுள்ளார். அந்த பாடலில் விஜய் தேவரகொண்டா சமந்தாவின் தோளில் காலை வைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இந்த குறிப்பிட்ட ஸ்டில்கள் காரணமாக நெட்டிசன்கள் சமந்தா மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும்  முன்னதாக சர்ச்சையை ஏற்படுத்திய சமந்தாவின் பழைய ட்வீட்டை நெட்டிசன்கள் நினைவூபடுத்தியும் வருகின்றனர்.

ஜவான் படத்தில் அனிருத் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? தாறுமாறான வளர்ச்சி தான்..

2014 ஆம் ஆண்டில், மகேஷ் பாபுவின் நீநோக்கடினி படத்தின் விளம்பரக் காட்சிகளின் போது, ​​மகேஷ் மற்றும் நடிகை க்ரித்தி சனோன் இடம்பெற்றுள்ள ஒரு போஸ்டர் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

அந்த போஸ்டரில் சமந்தா மறைமுகமாக தனது கருத்தை வெளிப்படுத்தி, பொதுவாக கதாநாயகிகள் ஹீரோக்களின் கால்களை பிடித்து நடித்து வரும் காட்சிகள், ஹீரோயின் மதிப்பிற்கு அது பின்னடைவாக தெரிகின்றது என தனது கருத்துக்களை குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் “ஆராத்யா” பாடலின் ஸ்டில் மூலம் தற்பொழுது சமந்தா கேலிக்கு உள்ளாக்கி, சமந்தாவின் பழைய ட்வீட்டை நெட்டிசன்களுக்கு நினைவுப்படுத்தி வருகின்றனர். மேலும் அவர் ஏன் இந்த காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று கேள்வி எழுப்பு வருகின்றனர். இது உங்கள் மதிப்பிற்கு பின்னடைவு இல்லையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

மேலும் உங்களுக்காக...