கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மக்கள் உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். ஆரோக்கியமான பழங்கால சிறுதானிய வகைகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் ஒரு சிலர் உணவு பழக்கங்களில் தங்களுக்கே தெரியாமல் பல தவறுகளை செய்து வருகிறார்கள். அந்த தவறுகள் என்ன அதை எப்படி மாற்றிக் கொள்ளலாம் என்பதை பற்றி இனி காண்போம்.
நம் உணவு பழக்கவழக்கங்களில் இருக்கும் சிறு சிறு தவறுகளால் மிகப்பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் அதை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு கண்டிப்பாக மூன்று வேலை உணவு சாப்பிட வேண்டும். சிலர் வேலைக்கு செல்ல வேண்டும் அவசரத்தில் காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்து விடுவார்கள். அது உங்களுக்கு உடல்நலனில் மிகப்பெரிய பின்னடைவுகளை நாளடைவில் ஏற்படுத்தும்.
மன அழுத்தம் மற்றும் கோபத்தில் இருக்கும் போது அதிகமாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கலாம். அந்த மாதிரி செய்யக்கூடாது. உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் நிதானமாக அமர்ந்து யோசனை செய்யுங்கள். முடிந்தால் அதிக அளவு நீர் பருகுங்கள். சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். அடுத்ததாக நம் குழந்தைகளுக்கு பரிசாக ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் போது சாக்லேட் பிஸ்கட் போன்றவற்றை தவிர்த்து பழங்கள் நட்ஸ் போன்றவற்றை கிப்ட் செய்யுங்கள். இது பயனுள்ளதாக இருக்கும்.
கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது. இனி வெயில் கடுமையாக இருக்கும். இந்த வெயில் நேரத்தில் வயிறு முட்ட உணவருந்த வேண்டாம். அதற்கு பதிலாக உங்களுக்கு சக்தி அளிக்கக்கூடிய இயற்கையான பானங்களான இளநீர் பதநீர் நுங்கு போன்றவற்றை சாப்பிடுங்கள். பழங்கள் காய்கறிகளை முடிந்த வரையில் குழாயில் இருந்து வரும் ஓடும் தண்ணீரில் கழுவிட்டு பயன்படுத்துங்கள். இது போன்ற உணவு பழக்க வழக்கங்களில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தும் போது நம் வாழ்க்கையின் நிலை மாறும்.