இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் Fast Food ஐ தான் விரும்புகிறார்கள். இளைஞர்கள் கூட Fast Food மோகத்தால் தான் இருக்கிறார்கள். திரும்பும் இடமெல்லாம் Fast Food கடைகள் ஆக்கிரமித்து இருக்கிறது. இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் போது உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் பருமன் ஆகிறது. அதனால் உடல் பருமன் ஆன பிறகு பலர் டயட் பாலோ செய்ய தொடங்கி விடுகிறார்கள்.
Liquid diet, vegen diet போல Intermittent Fasting Diet என்பதையும் பலர் பாலோ செய்து வருகிறார்கள். இந்த Intermittent Fasting என்பது பிரபலமான ஒன்றாகவும் இருக்கிறது. கிட்டத்தட்ட இது ஒரு விரத முறை போன்று தான். இந்த Intermittent Fasting செய்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது என்று கூறப்படுகிற.து அதை பற்றி இனி காண்போம்.
Intermittent Fasting உணவு உண்ணும் நேரத்திற்குள்ள இடைப்பட்ட நேரம் 16.8, அதாவது 16 மணி நேரம் உண்ணாவிரதம் 8 மணி நேரம் உணவு என பின்பற்றுவதாகும். இந்த முறையை பின்பற்றும் போது உடலுக்கு தொடர்ச்சியான செரிமானத்திலிருந்து இடைவெளி கொடுத்து சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பை கரைக்க பெரும்பாலும் உதவுகிறது. முக்கியமாக கல்லீரல் கொழுப்பை கரைப்பதற்கும் சுத்தப்படுத்துவதற்கும் இந்த Intermittent Fasting உதவுகிறது என்று தற்போது ஆய்வில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இந்த Intermittent Fasting ஐ நீங்கள் தொடர்ந்து பின்பற்றும் போது உங்கள் கல்லீரலில் இருக்கும் கொழுப்பு வீக்கம் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை குறைப்பதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும். இது மட்டுமல்லாமல் உடலில் தங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்பு விரைவில் கரைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் உடல் எடையை எளிதாக உங்களால் குறைக்க முடியும். ஆனால் எந்த ஒரு டயட்டை நீங்கள் பாலோ செய்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.