நாளை மார்ச் 8 மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு இடங்களிலும் விழா ஏற்பாடு செய்து மகளிரை போற்றுவார்கள். சாதனை செய்த மகளிருக்கு கௌரவமும் செய்வார்கள். தற்போது L&T நிறுவனத்தின் தலைவர் சுப்பிரமணியன் மகளிர் தினத்தை முன்னிட்டு தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் மகளிருக்கு ஒரு சலுகையை வழங்கியுள்ளார். அதை பற்றி இனி காண்போம்.
L&T நிறுவன தலைவர் சுப்பிரமணியன் மகளிர் தினத்தை முன்னிட்டு தங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிடாய் மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதன் மூலம் இவரது நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 5,000 பெண் ஊழியர்கள் பயனடைய இருக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல தரப்பிலிருந்து கோரிக்கை வைத்த நிலையில் தற்போது இந்திய தொழில் துறையில் முன்னோடியாக இந்த திட்டத்தை L&T நிறுவன தலைவர் சுப்பிரமணியன் அறிவித்திருக்கிறார். இதை செய்வதில் எனக்கு பெருமிதம் என்றும் கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் இதுபோல பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.