நீங்கள் நாள் முழுவதும் கம்ப்யூட்டரில் வேலை செய்கிறீர்களா… கண்ணை பாதுகாக்க இதை பின்பற்றுங்க…

இன்றைய காலகட்டத்தில் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. பெரும்பாலானோர் கம்ப்யூட்டரில் தான் வேலை செய்கிறார்கள். அப்படி நீங்கள் நாள் முழுவதும் கம்ப்யூட்டரில் வேலை செய்தால் உங்களை கண்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். அப்படி உங்கள் கண்களை…

eyes

இன்றைய காலகட்டத்தில் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. பெரும்பாலானோர் கம்ப்யூட்டரில் தான் வேலை செய்கிறார்கள். அப்படி நீங்கள் நாள் முழுவதும் கம்ப்யூட்டரில் வேலை செய்தால் உங்களை கண்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். அப்படி உங்கள் கண்களை பாதுகாக்க எளிமையான ஒரு பயிற்சியை பற்றி இனி காண்போம்.

நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போது உங்கள் கண்களை பாதுகாக்க 20- 20- 20 என்ற விதியை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒருமுறை 20 வினாடிகள் 20 அடி தொலைவில் இருக்கும் ஒரு பொருளை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதுபோல அடிக்கடி செய்யும்போது உங்கள் கண்களில் இருக்கும் நரம்புகள் தளர்ச்சி அடையும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது கண்களை நிறைய தடவை சிமிட்டுவது. கண்களை மேல் கீழ் என உருட்டுவது போன்ற பயிற்சிகளை செய்யும்போது உங்கள் கண்ணில் அழுத்தம் ஏற்படாமல் இருக்கும். கண் வலி, கண் வீக்கம் போன்றவைகள் ஏற்படமால் இருக்கும்.

நாள் முழுவதும் நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது கண் பாதிப்படையாமல் இருப்பதற்காக கண்ணுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளையும் ஊட்டச்சத்தான உணவுகளையும் சாப்பிட வேண்டும். முடிந்தவரை கம்ப்யூட்டர் கிளாஸ் பயன்படுத்துவதும் கூட ஒரு நல்ல முறையாக தான் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த 20- 20- 20 என்ற விதியை பயன்படுத்த தவறாதீர்கள்.