சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்து இன்று தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கினார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற காமெடி கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்களை கவர்ந்தார். அதற்கு அடுத்ததாக வேலைக்காரன், சீமராஜா, மாவீரன், அயலான் போன்ற கமர்சியல் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
கடந்த ஆண்டு இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அதற்குப் பிறகு பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடத்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் தற்போது சுதா கோங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதேபோல் விஜய் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.
முதலில் வருகிற தீபாவளிக்கு ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்த பொங்கல் ரிலீஸ் என்று மாற்றி வைத்து விட்டார்கள். அதேபோல் சிவகார்த்திகேயனின் பராசக்தி ரிலீசும் தீபாவளிக்கு என்று கூறப்படுகிறது. அது தள்ளி போகலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஜனநாயகன் படத்தோடு பராசக்தி மோதவிக்கிறது விஜய் படம் ரிலீசாகும்போது எஸ் கே வின் படமும் ரிலீஸ் ஆகும் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சு நிலவி வந்தது.
ஆனால் இதை அறிந்த சிவகார்த்திகேயன் ஐயையோ அப்படியெல்லாம் நான் விஜய் சாரோடு மோத மாட்டேன். அவ்வளவு பெரிய ஆளெல்லாம் நான் கிடையாது என்று இந்த விஷயத்தை கேட்டு தெரிந்து ஓடி விட்டாராம் SK.