உடம்பில் வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்…

Published:

வைட்டமின்கள் எனப்படுவது உடல் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் தேவையான ஒரு சத்து ஆகும். வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் பி 12, வைட்டமின் ஈ, வைட்டமின் கே போன்ற பல வகை வைட்டமின்கள் உள்ளன. இவற்றை ஒட்டுமொத்தமாக மல்டிவிட்டமின் என்று கூறுவார்கள். இந்த வைட்டமின் சத்து நம் உடம்பில் குறைந்தால் அது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். நம் உடம்பில் வைட்டமின் சத்து குறைந்தால் அல்லது வைட்டமின் சத்துக்களை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இனிக் காண்போம்.

வைட்டமின் ஏ நம் உடம்பில் குறைந்தால் அது பார்வை குறைபாடு மற்றும் தோல் புண்களுக்கு வழி வகுக்கும். ஒவ்வொரு ஆண்டும் கால் மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை வைட்டமின் ஏ குறைபாடு பாதிக்கிறது. வைட்டமின் ஏ சத்தை அதிகரிக்க உதவும் உணவுகள் என்னவென்றால் பச்சைக் கீரை வகைகள், பூசணிக்காய், சீனி கிழங்கு, கேரட், மாம்பழம், பப்பாளி பழம், பால், முட்டை, வெண்ணெய் போன்றவை வைட்டமின் ஏ சத்து அதிகமுள்ள உணவுகள் ஆகும்.

வைட்டமின் பி சத்து குறைபாடு என்றால் அது ஊட்டச்சத்து குறைபாட்டை உருவாக்கும். வைட்டமின் பி சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் ஆனது பருப்பு வகைகள், விதைகள், கீரைகள், முட்டை, பால், இறைச்சி, மீன் மற்றும் முளைகட்டிய தானியங்கள் ஆகியவை ஆகும்.

நம் உடம்பில் உள்ள உறுப்புகள் அதனது வேலைகளை சரியாக செய்வதற்கு விட்டமின் பி 12 என்ற சத்து அவசியம். இந்த விட்டமின் பி12 சத்துள்ள உணவுகள், ஆட்டு ஈரல், பன்னி கறி, ஆட்டு இறைச்சி, கோழி, வான்கோழி, சல்மன் வகை மீன்கள், நண்டு, சிப்பி கறி, முட்டை, ஆப்பிள், வாழைப்பழம், ப்ளூபெர்ரி, பேரிச்சம்பழம், ஆரஞ்சுகள், போன்றவற்றில் வைட்டமின் பி2 சத்துகள் அதிகமாக உள்ளன.

நம் உடம்பில் உள்ள செல்கள் வளர்ச்சிக்கு மூளை ஆரோக்கியத்திற்கு நோய் எதிர்ப்பு சக்திக்கு விட்டமின் சி சத்து கண்டிப்பாக தேவை. வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த உணவுகள் பிரக்கோலி, எலுமிச்சை பழம், கிவி பழம், ஸ்ட்ராபெர்ரி, கொய்யாப்பழம், தக்காளி, உருளைக்கிழங்கு, குடைமிளகாய் போன்றவற்றில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது.

வைட்டமின் டி3 சத்து உங்கள் உடம்பில் குறைந்தால் அது உங்கள் எலும்புகளை வலுவிழக்க செய்யும். இதனால் உங்களுக்கு தசை வலி, உடல் சோர்வு, முடி உதிர்தல் போன்றவை ஏற்படலாம். வைட்டமின் டி3 நிறைந்த உணவுகள் காளான்கள், சால்மன் மீன், முட்டையின் மஞ்சள் கரு, ஆரஞ்சு பழம், தயிர், பால் ஆகியவற்றில் வைட்டமின் டி3 சத்துக்கள் அதிகம் உள்ளன.

விட்டமின் ஈ சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், இதய ஆரோக்கியத்திற்கும் ரத்த சுத்திகரிப்புக்கும் தேவையான ஒன்றாகும். வைட்டமின் ஈ சத்து நிறைந்த உணவுகள் வேர்க்கடலை, வெண்ணெய், பாதாம் பருப்பு, வேர்க்கடலை, கிவி பழம், அவகேடோ, மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகம் உள்ளது.

விட்டமின் கே சத்துக்கள் நம் உடம்பில் ரத்தம் உறைதல், மாரடைப்புக்கு எதிராக இதயத்தை காத்தல் போன்றவற்றிற்கு உதவுகிறது. விட்டமின் கே சத்துக்கள் நிறைந்த உணவுகள் பசலைக் கீரை, முட்டை, வாழைப்பழம், மீன், இறைச்சி, ஈரல், போன்றவற்றில் வைட்டமின் கே உள்ளது.

நம் உடம்பு செயல்பாட்டிற்கு அனைத்து விதமான வைட்டமின்கள் கட்டாயம் தேவை. அதனால் மேலே குறிப்பிடப்பட்ட உணவுகளை அன்றாடம் தவறாமல் உங்களுடைய உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் கூடும்.

மேலும் உங்களுக்காக...