இந்தியாவின் முதல் பெண் IPS அதிகாரி கிரண் பேடி அவர்களின் சாதனைகள் என்ன தெரியுமா…?

Published:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசில் 1949 ஆம் ஆண்டு பிறந்தவர் கிரண் பேடி. இளம் வயதிலேயே கவிதை ஒப்புவித்தல், நாடகம், விவாத மேடை, பேச்சு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றவர் கிரண்பேடி. கிரண்பேடி இளங்கலை ஆங்கிலம், முதுகலை அரசியல், இளங்கலை சட்டம் மற்றும் முனைவர் ஆகிய பட்டப் படிப்பை படித்து உள்ளார்.

கிரண்பேடி இந்திய காவல்துறையில் 1972 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். காவல் அதிகாரி மட்டுமல்லாமல் கிரண்பேடி ஒரு அரசியல்வாதி சமூக ஆர்வலர் மற்றும் டென்னிஸ் விளையாட்டு வீரர் ஆவார்.

தேராடூன் அடுத்த மசூரில் காவல்துறை பயிற்சியை தொடங்கினால் கிரண்பேடி அந்த பிரிவில் பயிற்சி பெற்ற 80 பேரில் இவர் ஒருவர்தான் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. கிரண் பேடி டெல்லி. கோவா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ளார். 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய பெண்கள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர். 1993 இவர் தில்லி சிறைச்சாலர்களுக்கு பொது ஆய்வாளராக பணியாற்றினார். இவர் அங்கிருந்த கைதிகளின் பலரை சீர்திருத்தி பாராட்டை பெற்றார். 1994 ஆம் ஆண்டில் ரமூன் விருதை வென்றார்.

போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றியபோது விதிமீறி நிறுத்தப்பட்டிருந்த பிரதமர் இந்திரா காந்தியின் காலையே கிரேன் வைத்து அப்புறப்படுத்திய துணிச்சல் படைத்தவர். கிரண் பேடி காவல்துறையினருக்கு பல்வேறு வசதிகளை பெற்று தந்தவர் ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் கிரண்பேடி.

போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மேம்பாடுகளுக்காக இந்தியா விஷன், நவஜோதி ஆகிய அமைப்புகளை நிறுவியுள்ளார் கிரண் பேடி. பல நூல்கள் ஏராளமான கட்டுரைகளையும் எழுதி உள்ளார். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பல மொழிகளில் திரைப்படங்கள், ஆவண படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

2007 ஆம் ஆண்டு கிரண்பேடி விருப்ப பணி ஓய்வு பெற்று பாஜக கட்சியில் இணைந்து பணியாற்ற தொடங்கினார். 2016 முதல் 2021 ஆண்டு வரை புதுச்சேரி மாநில துணை ஆளுநராக பதவி ஆற்றினார் கிரன்பேடி. அரசியல் ஊழல் ஒழிப்பு சமூக மேம்பாடு போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்ட கிரண் பேடி இன்றளவும் அரசியலில் மக்களுக்காக பணியாற்றி வருகிறார்.

மேலும் உங்களுக்காக...