அழகை போலவே பற்கள் பராமரிப்பும் மிகவும் அவசியம்… அழகான வெண்மையான பற்களுக்கு இந்த விஷயங்களை கடைபிடிங்க…

மக்கள் எல்லோருமே அழகை பராமரிப்பதை விரும்பத்தான் செய்வார்கள். உடலையும் முகத்தையும் அழகுபடுத்த பல விஷயங்களை குறிப்பாக பெண்கள் செய்வார்கள். ஆனால் அழகை போலவே மிகவும் பராமரிக்கப்படக்கூடிய ஒரு விஷயம் என்றால் பற்களின் நலம் தான்.…

dental

மக்கள் எல்லோருமே அழகை பராமரிப்பதை விரும்பத்தான் செய்வார்கள். உடலையும் முகத்தையும் அழகுபடுத்த பல விஷயங்களை குறிப்பாக பெண்கள் செய்வார்கள். ஆனால் அழகை போலவே மிகவும் பராமரிக்கப்படக்கூடிய ஒரு விஷயம் என்றால் பற்களின் நலம் தான். ஏனென்றால் பற்களில் வலி வந்து விட்டால் அது பிரசவ வலிக்கு சமம் அதை தாங்க இயலாது என்று கூறுவார்கள். அதன்படி பற்கள் அழகாக இருந்தால் தான் அது முகத்துக்கே அழகாகும்.

பற்கள் வெண்மையாக சுத்தமாக இருக்கும் போது தான் நமக்கு ஒரு தன்னம்பிக்கை வரும். பொது இடங்களில் நம்மால் கூச்சமும் இன்றி பழக முடியும். அப்படி உங்கள் பற்கள் வெண்மையாக சுத்தமாக இருக்க துர்நாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் பின்வருவனவற்றை தவறாமல் கடைப்பிடியுங்கள்.

எப்போதுமே தினமும் இரண்டு முறை பல் தேய்க்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். காலை மற்றும் இரவு பல் துலக்குவது உங்கள் பல் சொத்தை ஏற்படாமல் தடுக்கும். அதுமட்டுமில்லாமல் தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணையை வாயில் 10 நிமிடங்கள் வைத்து கொப்பளிக்கும் போது நீங்கள் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். வாய் துர்நாற்றத்தை இது போக்குகிறது.

அதிகப்படியான இனிப்பு பொருட்களை சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள். குறிப்பாக சாயங்கால நேரத்திற்கு பிறகு இனிப்பை சாப்பிடாதீர்கள். தவிர்க்க முடியாத சூழலில் இனிப்பு சாப்பிடும்போது கட்டாயம் அன்றைய இரவு பல் தேய்த்து விட்டு உறங்க செல்லுங்கள். சிறிதாக பல்லில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்ட உடனேயே பல் மருத்துவ வரை அணுகினால் முடிந்தவரை பற்களை முழுதாக காப்பாற்ற முடியும். இதுபோன்ற டிப்ஸ்களை நீங்கள் பின்பற்றி வரும்போது உங்களுக்கு அழகான வெண்மையான பற்கள் கிடைக்கும்.