கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. இனி வெயில் உஷ்ணம் வாட்டி வதைக்கும். இந்த கடுமையான வெயிலினால் சிலருக்கு உடல் சூடு அடைந்து பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும். வயிற்று வலி தலை சுற்றல் வறட்சியான தோல் போன்ற பல அசௌகரியங்கள் ஏற்படலாம்.
அப்படி வெயிலின் தாக்கத்தால் உங்கள் உடல் உஷ்ணம் அடைந்தால் பின்வரும் சில வழிமுறைகளை பின்பற்றும்போது உங்களது உடல் சூட்டை தணிக்க முடியும். அவை என்னவென்று இனி காண்போம்.
வெயில் காலத்திற்கு உடல் சூட்டை தணிப்பதற்கு தினமும் கட்டாயம் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். அதைத்தொடர்ந்து இளநீர், நுங்கு, பதநீர் போன்ற இயற்கை பானங்களை குடிப்பது உடலுக்கு வலுவூட்டும். அதை தவிர்த்து சில பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களை குடிப்பதை அறவே தவிர்த்து விட வேண்டும். அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்.
அதுமட்டுமில்லாமல் பிரெஷ் பழ ஜூஸ்கள், எலுமிச்சை ஜூஸ், கரும்புச்சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அதிகமாக பழங்களை சாப்பிடலாம். இந்த கோடை நேரத்தில் துரித உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டால் அது செரிமானம் ஆகும் பிரச்சனையை ஏற்படுத்தலாம். அதனால் சரியான உணவு முறைகளுடன் உங்களின் உடலில் நீர் அளவு குறையாத அளவுக்கு மற்றும் இயற்கை பானங்களை அருந்தும் போது உங்களது உடல் உஷ்ணத்தை தணிக்க முடியும்.