Always a Lion.. கோட் படத்திற்கு முன்பே விஜய் பத்தி ட்ரைலரில் ஒய். ஜி. மகேந்திரன் பேசுன மாஸ் வசனம்.. ஞாபகம் இருக்கா..

Published:

விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ஒரு நாளான போதிலும் இன்னும் அதை பற்றிய பேச்சு கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. விஜய் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவது பற்றிய அறிவிப்பு வந்தாலே அதனை மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் செய்வது ரசிகர்களின் வழக்கம்.

அப்படி இருக்கும் போது ட்ரைலர் வரும் சமயத்தில் அவர்கள் எப்படி அதனை கொண்டாடாமல் இருப்பார்கள். அதுவும் விஜய் இன்னும் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடிக்க உள்ளதால் இனி வரும் அப்டேட்கள் அனைத்தையுமே கொண்டாடி தீர்க்கவும் அவர்கள் தயாராகி விட்டார்கள். இதனிடையே கோட் படத்தின் முந்தைய அப்டேட்டுகள் எதுவும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்படாத சூழலில் தான் டிரைலர் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்து வருகிறது.

பாடல்கள் மூலம் யுவன் சங்கர் ராஜா சிறிய ஏமாற்றத்தை கொடுக்க, ட்ரைலர் மீதிருந்த நம்பிக்கையை சிறப்பாக நிறைவேற்றி விட்டார் வெங்கட் பிரபு. வயதான விஜய் தொடங்கி டீன் ஏஜ் வீஜய் வரை நிறைய லுக்குகள் இருக்க, அதுவும் திரைப்படம் ரிலீசுக்கு பின் ரசிகர் மத்தியில் அதிக கவனம் பெறும் என்று தெரிகிறது.

வெறும் ஒரு கமர்சியல் திரைப்படமாக மட்டுமல்லாமல் சயின்ஸ் பிக்ஷன் கதை பின்னணி கொண்ட திரைப்படமாகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது. அதனை உண்மையாக்கும் வகையில் ட்ரெய்லரில் கூட சில தொழில்நுட்பக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது, ரசிகர்கள் மத்தியில் ஆவலையும் அதிகப்படுத்தி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் 90ஸ் பிரபல நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, ஸ்னேகா, லைலா, மைக் மோகன் உள்ளிட்ட பலரும் இருப்பது கோட் படத்திற்கு மிகப்பெரிய ஒரு சாதகமான விஷயம் தான்.

இன்னும் 20 நாட்களுக்குள் கோட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் சிஎஸ்கே அணியுடனும் சில கனெக்சன் இந்த படத்தில் உள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சென்னை அணி ஆடும் ஐபிஎல் போட்டிக்கு மத்தியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், தோனிக்கு நிகராக ஒரு டயலாக்கையும் ஒய். ஜி. மகேந்திரன் இந்த ட்ரைலரில் பேசி இருப்பார்.

“Once A Lion Always A Lion” என விஜய்யை பார்த்து அவர் பேசும் வசனம் இந்த ட்ரைலரில் இடம் பெற்றுள்ள நிலையில் இதற்கு முன்பும் விஜய் படத்தில் ஒய் ஜி மகேந்திரன் பேசிய வசனம் தொடர்பான விஷயம் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. விஜய் இயக்கத்தில் உருவான தலைவா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான சமயத்தில் ஒரு வசனம் பெரிய அளவில் கவனம் ஈர்த்திருந்தது.

அதன் ஆரம்பத்தில், “தலைவன்ங்குறது நாமத் தேடி போற விஷயமில்ல.. நம்மள தேடி வர விஷயம்” என ஒய். ஜி. மகேந்திரன் பேசுவார். விஜய் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த வசனம் போல, தற்போது கோட்டிலும் விஜய் பற்றி அவர் பேசிய வசனம் அதிக ஹிட்டடித்து வருகிறது.

மேலும் உங்களுக்காக...