விஜய் சாரின் இறுதிப் படத்தை இந்த மாதிரி தான் எடுக்கப் போறேன்… H வினோத் பகிர்வு…

By Meena

Published:

எச். வினோத் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் ஆர் பார்த்திபன் மற்றும் விஜய் மில்டன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் வினோத். பச்சை குதிரை மற்றும் கோலிசோடா ஆகிய படங்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

பின்னர் 2014 ஆம் ஆண்டு மனோபாலா தயாரித்த சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் வினோத். இப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. 2016 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தை இயக்கினார் எச் வினோத். இந்த திரைப்படமும் கார்த்திக்கு நல்ல பெயரை பெற்று தந்தது மட்டுமில்லாமல் நல்ல விமர்சனங்களை பெற்றது.

அடுத்ததாக நடிகர் அஜித்தை வைத்து 2019 ஆம் ஆண்டு நேர்கொண்ட பார்வை 2022 ஆம் ஆண்டு வலிமை மற்றும் 2023 ஆம் ஆண்டு துணிவு ஆகிய படங்களை இயக்கினார் வினோத். மூன்று கதைகளுமே அஜித்தை வெவ்வேறு கோணங்களில் மக்களுக்கு காட்டியது.

குறிப்பாக வலிமை திரைப்படத்தின் மூலம் பெருவாரியான மக்களின் பாராட்டுகளை பெற்ற வினோத் நட்சத்திர அந்தஸ்தையும் முன்னணி இயக்குனராகவும் ஆனார். வலிமை திரைப்படம் பெரும்பாலான பாசிட்டிவ் ரிவ்யூக்களை பெற்றது. தற்போது அடுத்ததாக நடிகர் விஜயை வைத்து படம் இயக்க களமிறங்கி இருக்கிறார் வினோத்.

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஏற்கனவே கமிட்டான படங்களில் நடித்துவிட்டு முழு நேர அரசியலில் இறங்க திட்டமிட்டு இருக்கிறார் நடிகர் விஜய். அப்படி நடிகர் விஜய் அவர்களின் இறுதி படமான தளபதி 69 என்ற படம் நீண்ட நாளாக யார் இயக்கப் போகிறார் என்று சஸ்பென்ஸ் ஆக இருந்தது.

தற்போது தளபதி 69 என்ற திரைப்படத்தை ஹச் வினோத் இயக்கப் போகிறார் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களை இன்பதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதைப் பற்றி வினோத் கூறுகையில் விஜய் சாரின் இறுதி படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக அரசியல் சார்ந்த படமாக இருக்காது. அனைத்து வயதினரும் ரசிகர்களும் ரசிக்கும்படியாக இந்த படத்தை உருவாக்க இருக்கிறேன் என்று பகிர்ந்துள்ளார் எச் வினோத்.

மேலும் உங்களுக்காக...