சுஜாதா சொன்ன அந்த ஒரு அட்வைஸ்.. பிரம்மாண்ட இயக்குநராக ஷங்கர் மாறிய தருணம்..

Published:

இன்று இந்தியன் 2 படத்தினை ஒருபுறம் டிரோல் செய்து கொண்டிருந்தாலும் மறுபுறம் படத்தைக் கொண்டாடத் தவறுவதில்லை. உலக நாயகனும் ஷங்கர் என்னும் இரு பிரம்மாண்டங்களும் இணைந்து கொடுத்த இந்தியன் 2 வசூலிலும் சோடை போகவில்லை. ஷங்கரின் படங்களில் பெரும்பாலும் ஜனரஞ்சகமான வசனங்களும், பிரம்மாண்டமான மேக்கிங்கும் இருக்கும். இதனாலேயே ஷங்கர் படங்களுக்கு எப்பவுமே தனி எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும்.

இப்படி ஷங்கர் தனி ஒரு ஆளாக இத்தனை வளர்ச்சியை அடையவில்லை. சுஜாதா, ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து, கைதேர்ந்த நடிகர்கள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து அதன்மூலம் வெற்றியைக் கண்டவர். இதில் எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கிறோம். சுஜாதாவின் எழுத்துக்களில் ஈர்க்கப்பட்டவர்கள் ஏராளம். ஏனெனில் அறிவியலுடன் கற்பனைக் கதையைக் கலந்து எழுதுவதில் கைதேர்ந்தவர். பெரும்பாலும் ஷங்கரின் படங்களில் வசனகார்த்தாவாகப் பணியாற்றியவர். இதில் ஜென்டில் மேன், இந்தியன், முதல்வன், சிவாஜி, அந்நியன் போன்ற படங்களின் வசனங்கள் இன்றும் நம்மிடையே பிரபலமாக இருப்பதற்குக் காரணம் சுஜாதாவின் எழுத்துக்களே.

இயக்குநர் ஷங்கர் சுஜாதாவின் மாணவராக அவரின் எழுத்துக்களை உள்வாங்கி அதற்கேற்ற காட்சிகளை வைத்து பிரம்மாண்டம் காட்டியிருப்பார். இப்படித்தான் இவர்களது சக்சஸ் இருந்தது. ஆனால் சுஜாதாவின் மரணத்திற்குப் பின் வெளியான 2.0, இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களிலும் வசனங்கள் என்பது ஆங்காங்கே திணிக்கப்பட்டது போல் இருக்கும்.

உங்க பேருல எத்தனை சிம்கார்டுகள் இருக்கு..? தட்டித் தூக்கத் தயாராகும் போலீஸ்.. புதிய சட்டம் அமல்

பாய்ஸ் படம் முடிந்த பிறகு இயக்குநர் ஷங்கர் தனது எஸ்.பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தினைத் தொடங்கி அழகிய கண்ணே என்ற படத்தினை எடுக்கத் தயாராகி இருக்கிறார். அச்சமயம் சுஜாதாவைச் சந்தித்து ஆலோசனை கேட்க, சுஜாதா ஷங்கரிடம் நீங்கள் எடுத்திருக்கும் முடிவு தவறானது. இதுபோன்ற படங்களை எடுப்பதற்கு வேறு நிறைய இயக்குநர்கள் இருக்கிறார்கள். நீங்கள் ஜனரஞ்சகமான, பிரம்மாண்ட பார்முலாவை நோக்கி செல்கிறீர்கள் எனவே இதையே தொடருங்கள். உங்களைப் போல் சினிமா எடுப்பது கடினம் என்று அவருக்கு அறிவுரை செய்திருக்கிறார்.

அதன்பின் ஷங்கர் அந்த முடிவினை மாற்றி மீண்டும் தனது பாதையிலேயே பயணிக்கத் தொடங்கினார். மேலும் தனது எஸ்.பிக்சர்ஸ் சார்பில் தன்னிடம் இணை இயக்குநர்களாகப் பணியாற்றிய பாலாஜி சக்திவேல், சிம்பு தேவன், வசந்த பாலன், அட்லி ஆகியோருக்கும் இயக்குநராகும் வாய்ப்பினையும் வழங்கியிருக்கிறார்.

மேலும் உங்களுக்காக...