ஒரே வார்த்தை தான் கமல் மற்றும் கிரேஸி மோகனை கிளீன் போல்டு செய்த நாகேஷ்…

Published:

தமிழ் சினிமாவில் காமெடி என்பதையும் தாண்டி ஹியூமரில் ஜொலிக்க வைப்பவர்கள் அந்தக் காலத்தில் நாகேஷ், அதற்கு அடுத்த தலைமுறையில் உலக நாகயன் கமல்ஹாசன். ஆனால் இப்போது காமெடி என்ற பெயரில் மொக்கைப் படங்களே வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் கமல்ஹாசனும், நாடக எழுத்தாளரும், திரைப்பட வசனகார்த்தாவுமான கிரேஸி மோகனும் பல படங்களில் தங்களது கைவண்ணத்தைக் காட்டியிருப்பார்கள். இவர்கள் கூட்டணியில் அமைந்த படங்கள் வசனத்திற்கு வசனம், காட்சிக்குக் காட்சி ஹியூமர் நிரம்பியிருக்கம். அப்படி இவர்கள் கூட்டணியில் உருவான ஒரு படம் தான் அபூர்வ சகோதரர்கள்.

1989-ல் வெளியான இப்படத்தினை சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கியிருப்பார். ராஜு மற்றும் அப்புவாக கமல் இரட்டை வேடங்களில் அசத்தியிருப்பார். இன்றுவரை குள்ள கதபாத்திரத்தில் எப்படி கமல் நடித்தார் என்பது அவருக்கே தெரிந்த ரகசியம். இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் கமலுடன் கௌதமி, ரூபினி, மௌலி, ஸ்ரீ வித்யா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். முக்கியமாக நாகேஷ் வில்லனாக நடித்திருப்பார்.

சுஜாதா சொன்ன அந்த ஒரு அட்வைஸ்.. பிரம்மாண்ட இயக்குநராக ஷங்கர் மாறிய தருணம்..

கமல்ஹானைக் கொல்லும் காட்சிகளில் தனது அபார நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருப்பார் நாகேஷ். இப்படி இரண்டாவது ரவுண்டில் நாகேஷின் மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்றாக விளங்கிய அபூர்வ சகோதரர்கள் படத்தில் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரம் அவருக்குப் பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. கமல்ஹாசனும், கிரேஸி மோகனும் பல காட்சிகளில் நகைச்சுவை ததும்ப எழுதியிருந்தாலும் சில வேளைகளில் அவர்களையே ஓவர்டேக் செய்து விடுவாராம் நாகேஷ்.

அப்படி ஒரு காட்சியில் கமலை தூக்கி வரச் சொல்லும் போது நாகேஷின் அடியாட்கள் ராஜுவுக்குப் பதில் அப்புவைத் தூக்கி வர, அவரைப் பார்த்தவுடன், ஒரே டயலாக்கில் பாக்கி எங்கடா.. என்று கேட்க, மொத்த யூனிட்டும் சிரிப்பலையில் அதிர்ந்து விட்டதாம். பக்கம் பக்கமாக எழுதிய வசனங்களை விட ஒரே காட்சியில், ஒரே வசனத்தில் ஒட்டு மொத்த நடிகர்களையும் தூக்கி சாப்பிட்டுவிட்டாராம் நாகேஷ்.  அதேபோல் குள்ள கமலின் நடிப்பும் இன்றுவரை பேசப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...