மீண்டும் இணைகிறார்களா ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித்குமார்… GBU படத்தில் இயக்குனர் கொடுத்த க்ளூ…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு கார் ரேசிங்கில் தான் அதிக…

gbu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு கார் ரேசிங்கில் தான் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. தனது 18 வது வயதில் கார் ரேசிங்கில் கலந்து கொண்டார் அஜித்குமார். அந்த நேரத்தில் மாடலிங்கும் செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

1990களில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அஜித் குமார் காதல் மன்னன் வாலி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு பல கமர்சியல் வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆனார் அஜித்குமார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறி பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீசானது. இந்த படம் தள்ளிப் போனதால் எல்லா திரைப்படங்களின் ரிலீஸும் குழப்பத்திற்கு உள்ளானது. அதே போல் இவர் நடித்த Good Bad Ugly திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. ரசிகர்கள் இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் Good Bad Ugly படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அஜித்குமார் மீண்டும் இணைந்து படம் பண்ண போகிறார் என்ற தகவல் வெளியானது.

தற்போது Good Bad Ugly திரைப்படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு க்ளுவை கொடுத்திருக்கிறார். அது என்னவென்றால் இந்த திரைப்படத்தின் இறுதி காட்சியில் வரும் காரின் நம்பர் DIR – AK – 64- 2026 என்று எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் அடுத்த வருடம் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்து அஜித்குமார் ஒரு படம் பண்ணுவார் என்பது தெரிகிறது. இதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.