தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு கார் ரேசிங்கில் தான் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. தனது 18 வது வயதில் கார் ரேசிங்கில் கலந்து கொண்டார் அஜித்குமார். அந்த நேரத்தில் மாடலிங்கும் செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
1990களில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அஜித் குமார் காதல் மன்னன் வாலி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு பல கமர்சியல் வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆனார் அஜித்குமார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறி பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீசானது. இந்த படம் தள்ளிப் போனதால் எல்லா திரைப்படங்களின் ரிலீஸும் குழப்பத்திற்கு உள்ளானது. அதே போல் இவர் நடித்த Good Bad Ugly திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. ரசிகர்கள் இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இரண்டு நாட்களில் Good Bad Ugly திரைப்படம் எவ்வளவு வசூலித்திருக்கிறது GOAT படத்தை மிஞ்சதா என்பதை பற்றி இனி காண்போம்.
நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் Good Bad Ugly திரைப்படத்திற்காக நீண்ட காலம் காத்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ஒரு மசாலா படமாக மாசான படமாக Good Bad Ugly இருக்கிறது என்று பலர் கூறுகிறார்கள். Good Bad Ugly திரைப்படம் ரிலீஸ் ஆன இரண்டு நாட்களில் 28.50 கோடி வசூலித்திருக்கிறது. அதேபோல் இந்த திரைப்படத்தில் முதல் நாள் வசூல் 22 கோடி ஆகும். GOAT திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 35 கோடிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.