ரசிகர்களுக்காக நான் ஏன் இதைப் பண்ணனும்… எம். எஸ். பாஸ்கர் காட்டம்…

Published:

முத்துப்பேட்டையை பூர்வீகமாகக் கொண்ட எம் எஸ் பாஸ்கர், நாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரின் முழு பெயர் முத்துப்பேட்டை சோமு பாஸ்கர் என்பதாகும். எம் எஸ் பாஸ்கர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார். தமிழகத்தில் நவீன நாடகங்களை நிகழ்த்திய ‘புதிய நாடகத்திற்கான சங்கம்’ என்ற தமிழ் நாடகக் குழுவில் உறுப்பினராக இருந்தவர் எம் எஸ் பாஸ்கர்.

1987 ஆம் ஆண்டு ‘திருமதி ஒரு வெகுமதி’ என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எம் எஸ் பாஸ்கர். அதைத் தொடர்ந்து 90களில் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். 2004 ஆம் ஆண்டு ‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் எம் எஸ் பாஸ்கர். 2000களில் சின்னத்திரையில் நடித்ததன் மூலமும் பிரபலமானவர் எம்எஸ் பாஸ்கர். அப்போது சன் டிவியில் ஓடிய பிரபல தொடரான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ நகைச்சுவை தொடரில் பட்டாபி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பேரும் புகழும் அடைந்தார். இது தவிர ‘செல்வி’, ‘அரசி’ போன்ற தொடர்களில் நடித்துள்ளார் எம் எஸ் பாஸ்கர்.

சின்னத்திரையில் பிரபலமானதை தொடர்ந்து வெள்ளித்திரையில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 2007 ஆம் ஆண்டு பிரித்திவிராஜ் ஜோதிகா நடித்த ‘மொழி’ திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆசிரியராக நடித்திருப்பார். இந்த படத்தில் நடித்ததற்கான சிறந்த குணசித்திர நடிகருக்கான விருதினை வென்றார். 2017 ஆம் ஆண்டு ‘எட்டுத்தோட்டாக்கள்’ படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் வென்றவர் எம்எஸ் பாஸ்கர்.

தொடர்ந்து ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘தசாவதாரம்’, ‘திண்டுக்கல் சாரதி’, ‘மாசிலாமணி’, ‘தெய்வத்திருமகள்’, ‘தாண்டவம்’, ’36 வயதினிலே’, ‘டாணாக்காரன்’, ‘ஜெய் பீம்’ போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் எம்.எஸ். பாஸ்கர். சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றவர் எம் எஸ் பாஸ்கர். தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவர இருக்கும் ‘ரகு தாத்தா’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் எம் எஸ் பாஸ்கர்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட எம் எஸ் பாஸ்கர் ரசிகர்களை பற்றி காட்டமாக பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், நான் சில பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதெல்லாம் என்னை பார்க்கும் ரசிகர்கள் சில பேர் இவன் ரொம்ப கஞ்சம் யாருக்கும் எதுவும் உதவி செய்ய மாட்டான் அப்படின்னு சொல்றாங்க. நானும் ஒரு காலத்துல உதவி செஞ்சேன்.. என்கிட்ட வந்து உங்களை ரொம்ப பிடிக்கும் நான் உங்க ரசிகர் எனக்கு சுகரு மாத்திரை வாங்க காசு இல்ல எனக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்கன்னு கேப்பாங்க. நானும் சரி மாத்திரை வாங்க தான கேக்குறாங்க அப்படின்னு காசு எடுத்து கொடுப்பேன். என் கையில காச வாங்கின உடனே நேரா டாஸ்மாக் போறாங்க அத நான் என் கண்ணால பார்த்தேன். இப்படி இருக்கிற ரசிகர்களுக்கு நான் ஏன் உதவி பண்ணனும், அவங்களுக்காக நான் ஏன் செய்யணும் என்று பேசி இருக்கிறார் எம் எஸ் பாஸ்கர்.

மேலும் உங்களுக்காக...