சட்டென வந்த எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா செய்த அந்த ஒற்றை செயல்.. கமல் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்

Published:

தமிழ் சினிமாவில் இருபெரும் துருவங்களாக விளங்கியவர்கள் எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும். ஒருவர் புரட்சித் தலைவராக மக்கள் மனதில் இடம்பிடித்து நாட்டையே ஆண்டவர். மற்றொருவர் ஒரு பகுத்தறிவு வாதி எப்படி இருக்க வேண்டும் என கடைசி வரை வாழ்ந்து மறைந்தவர். இவ்வாறு நடிகவேள் எம்.ஆர்.ராதா பற்றியும், எம்.ஜி.ஆர் பற்றியும் கமல் பகிர்ந்த சுவாரஸ் நிகழ்வு இது.

ஒருமுறை ஏ.வி.எம் அறக்கட்டளைக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் ஒரு திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த விழாவிற்கு ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றன. அதில் எம்.ஆர்.ராதாவும் கலந்து கொண்டிருக்கிறார். எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரைச் சுட்டு அந்த குற்றத்திற்காக சிறை சென்று மீண்டு வந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் எம்.ஆர்.ராதா கலந்து கொண்ட அந்த திருமணத்தில் திடீரென எம்.ஜி.ஆர் உள்ளே நுழைந்திருக்கிறார்.

அப்பா படத்துல ஹீரோ.. மகன் படத்துல வில்லன்.. தனுஷ் பேய் மாதிரி இயக்குறாரு.. தனுஷை புகழ்ந்த நடிகர் சரவணன்

அங்கிருந்த அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டிருக்கிறது. ஆனால் உள்ளே வந்த எம்.ஜி.ஆரைப் பார்த்து எம்.ஆர்.ராதா நல்லா இருக்கீங்களா என்று சாதாரணமாகக் கேட்க, எம்.ஜி.ஆரும் பதிலுக்கு நல்லா இருக்கேன் என்று கூறிவிட்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்திருக்கிறார். அரங்கமே ஒருகணம் நிசப்தமாக மாறி பின் பழைய நிலைக்குத் திரும்பியிருக்கிறது. இருவருக்கும் உண்டான பிரச்சினைகள் நாடே தெரிந்திருந்தாலும் பொது இடத்தில் ஒருவரையொருவர் மதிக்கும் பண்பு அந்த இடத்தில் உயர்ந்தோங்கி நின்றது.

மேலும் நாத்திகராக விளங்கிய எம்.ஆர்.ராதா கந்தர் அலங்காரம் என்ற பக்திப் படத்தில் நடித்திருக்கிறார். இதில் நாத்திகராக இருக்கும் ஒருவர் எப்படி முருக பக்தர் ஆகிறார் என்பது கதை. இதில் எம்.ஆர்.ராதா ஒரு காட்சியில் முருக பக்தராக மாறும் காட்சியில் கடவுள் முருகன் அவர் அருகில் வரும் போது எந்த வித சலனமும் இல்லாமல் யார் நீ என்றும், உன் பெயர் என்ன? உன் தந்தை பெயர் என்ன என்று முருக்கடவுளையே எடக்கு மடக்காக கேள்வி கேட்பது போல் ஒரு காட்சி இருக்கும். அந்த அளவிற்கு நாத்திகராக இருந்தபோதிலும் இயல்பாக பகுத்தறிவை அந்தக் காட்சியில் பதிவு செய்திருப்பார் எம்.ஆர்.ராதா.

மேலும் உங்களுக்காக...