கமல், ரகுவரனுடன் இணைந்து நடிக்காததற்கு இதுதான் காரணமா? இது தெரியாமப் போச்சே…!

Published:

நாயகன் படத்தில் கமலுடன் இணைந்து முதலில் நடிக்க இருந்தவர் ரகுவரன் தானாம். படத்தில் நாசர் நடித்த கேரக்டரில் அவர் தான் நடிப்பதாக இருந்ததாம். அந்த போலீஸ் வேடத்தில் நாசர் நடித்து அசத்தியிருந்தார். சில காட்சிகளில் ரகுவரனும் நடித்து விட்டாராம்.

Nayagan
Nayagan

சில நாள்கள் சூட்டிங்குப் பிறகு கமலுக்குப் படத்தின் காட்சிகள் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக வரவில்லை என்று தோன்றியது. அதைப்பற்றி மணிரத்னத்துடன் விவாதித்தாரம். காட்சியில் அழுத்தம் இல்லை என்று. அதன்பிறகு மணிரத்னமும் ரகுவரனுக்குப் பதிலாக நாசரை அந்தக் கேரக்டரில் போட்டு நடிக்க வைத்தாராம். இதற்கு ரகுவரனும் எந்த மறுப்பும் சொல்லாமல் படத்தில் இருந்து விலகிக் கொண்டாராம்.

இதுபற்றி கமல் ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காட்சியில் ரகுவரனின் பாடி லாங்குவேஜூம், டயலாக் டெலிவரியும் எங்களுக்குள் ஒரே மாதிரி இருந்தது. அந்தப் படத்தைப் பொறுத்தவரை கமலும் உடல் தோரணை, வசன உச்சரிப்பு என இரண்டுமே மெதுவாகத் தான் இருக்கும். அதே போல வில்லனின் தோரணையும் இருந்தால் காட்சியில் ஒரு அழுத்தம் வராது.

உடல் தோரணை மற்றும் வசன உச்சரிப்பில் ஒருவர் வேகமாகவும், ஒருவர் சீரான வேகத்திலும் இருந்தால் தான் அந்தக் காட்சி அழுத்தமாக இருக்கும். அதில் ரசிகனுக்கும் ஒரு பிடிப்பு இருக்கும். சுவாரசியமும் இருக்கும். இதனால் தான் அந்த இடத்தில் ரகுவரனை மாற்ற வேண்டி இருந்தது.

Baasha
Baasha

படத்தைப் பொறுத்தவரையில் ரஜினி, நாசர், சத்யராஜ் வேகமான உடல் மொழியைக் கொண்டவர்கள். கமல், ரகுவரன் சீரான உடல் மொழியைக் கொண்டவர்கள். உதாரணமாக மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிக்கும், சத்யராஜிக்கும் இடையிலான காட்சிகள் அப்படி இருந்ததால் தான் ஒர்க் அவுட் ஆகியுள்ளன.

அதே போல காக்கி சட்டை படத்தில் கமலும், சத்யராஜூம் நடித்த காட்சிகள் எல்லாம் நல்லா மேட்ச் ஆகும். வில்லத்தனமும் கெத்தாக இருக்கும். ஹீரோயிசமும் கைதட்டல் வாங்கும்.

ரஜினியின் பாட்ஷா, அருணாச்சலம் படத்தைப் பாருங்கள். ரஜினி, ரகுவரன் காட்சிகள் செம மாஸாக இருக்கும். கமல், நாசர் நடிப்பில் தேவர் மகன் படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே தட்டாது.

அதனால் தான் கமலும், ரகுவரனும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்த உண்மையை உணராத ஒரு சிலர் கமல் உடன் நடிக்கும் நடிகர்கள் தன்னை விட சிறப்பாக நடிப்பதை ஒத்துக்கொள்ள மாட்டார். அதனால் தான் ரகுவரனை தன்னுடன் இணைந்து நடிக்க அனுமதிக்கவில்லை என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அது தவறு என்பது இப்போதுதான் புரிகிறது.

மேலும் உங்களுக்காக...