தளபதி விஜயா? சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தா…? இதுல யாரு முதல் இடம்னு தெரியுமா? பார்த்தா அசந்துருவீங்க…!

Published:

தற்போது சமூக வலைதளங்கள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் மத்தியிலும் ரொம்பவே பாப்புலராகி விட்டது. இதற்கு காரணம் ஸ்மார்ட் போன் தான். பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், டெலகிராம், இன்ஸ்டாகிராம்னு எக்கச்சக்க ஆப்ஸ்கள் வந்துவிட்டன. ஒவ்வொரு ஆப்களிலும் ஏகப்பட் குரூப்புகள் என ஒரு இளைஞனின் பன்முகத்திறனையும் வளர்க்கும் கலைக்கூடமாகவும் விளங்குகிறது.

Instagram
Instagram

இந்த வகையில் டிக் டாக் ஆப் ஏகப்பட்ட கலைஞர்களை உருவாக்கியது. டுவிட்டர் ஏகப்பட்ட சமூகப் போராளிகளையும் அவர்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் தளமாக விளங்கியது. பேஸ்புக் அன்று முதல் இன்று வரை ஒரு கதம்பமாகவும் தன்னை அவ்வப்போது மெரூகூட்டிக் கொண்டும் இருக்கிறது.

வாட்ஸ் அப் இல்லாத செல்போனே இல்லை என்ற அளவிற்கு அபார வளர்ச்சி பெற்று விட்டது. அந்த வரிசையில் இன்ஸ்டாகிராம் இளைஞர்களுக்கு என்றே உருவாக்கப்பட்டுள்ளது போல ரீல்ஸ், வீடியோ, கலக்கலான போட்டோ என பார்வையாளர்களைத் திணறடித்து வருகிறது. நடிகைகள் எல்லாருமே தங்களது ஸ்டன்னி லுக் போட்டோக்களையும், வீடியோக்களையும் இதில் தான் அப்லோடு பண்ணுகின்றனர். தமிழ்நடிகைகளில் ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால் ஆகியோருக்கு இன்ஸ்டாகிராம்ல 14, 15 மில்லியன் பயனர்கள் பாலோயர்ஸ்களாக உள்ளனர். நடிகர்களைப் பற்றியும் அவர்களது சாதனைகளைப் பற்றியும் பார்ப்போம்.

STR
STR

தமிழ் நடிகர்களில் நடிகர் விஜய் ஒரு மில்லியன் பாலோயர்களை வேகமாகப் பெற்று உலகளவில் 3வது இடத்தை வகிக்கிறார். அதிகளவில் ஃபாலோயர்களைக் கொண்ட தமிழ் நடிகர்களின் பட்டியலைப் பார்ப்போம்.

இதில் நம்பர் ஒன் இடத்தில் 11.7 மில்லியன் பாலோயர்களைக் கொண்டு எஸ்.டி.ஆர்… சிலம்பரசன் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இதுல ரெண்டாவது இடத்தில் விஜய் சேதுபதி 6.7 மில்லியன் பாலோயர்களுடன் இருக்கிறார்.

Vijay sethupathi
Vijay sethupathi

3வது இடத்தில் சூர்யா 6.4 மில்லியன், 4வது இடத்தில் சிவகார்த்திகேயன் 5.7 மில்லியன், 5வது இடத்தில் தனுஷ் 5.6 மில்லியன் என்ற அளவில் பாலோயர்களைக் கொண்டுள்ளனர்.

6வது இடத்தில் தான் தளபதி விஜய் இருக்கிறார். இவர் தற்போது 5.5 மில்லியன் பாலோயர்களைக் கொண்டுள்ளார். இதை அவர் ரெண்டாவது நாளிலேயே சாதித்துக் காட்டியுள்ளார். இனி வரப்போகும் நாள்களில் முதலிடத்திற்கு வந்து விடுவார் என்றே சொல்லலாம்.

Kamal
Kamal

7வது இடத்தில் நடிகர் கார்த்தி உள்ளார். இவர் 3 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். 8வது இடத்தில் 2.7 மில்லியன் பாலோயர்களைக் கொண்டு உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளார். 9 வது இடத்தில் ச்சீயான் விக்ரம் 1.7 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். 10வது இடத்தில் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 955 கே பாலோயர்களைக் கொண்டு இருக்கிறார்.

இன்னும் ஒரு மில்லியன் கூட தாண்டல. இதை வைத்துப் பார்க்கும்போது தற்போதைய சூப்பர்ஸ்டார் யாருன்னு பரபரப்பாகப் பேசப்படுது. தளபதி உலக சாதனை படைத்து இருக்கிறார். அதனால இந்த விஷயத்துல இவர் தான் உண்மையான சூப்பர்ஸ்டார் என்றும் பேச்சு அடிபடுகிறது.

 

மேலும் உங்களுக்காக...