ஏன் இந்தப்படம் பிடிக்கல… எப்போ இந்த சமூகம் மாறப்போகிறது… பார்வையாளர்களிடம் ஆவேசமாக கேள்வி கேட்ட பா ரஞ்சித்…

Published:

பா ரஞ்சித் சென்னை ஆவடியில் பிறந்தவர். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். தனது கல்லூரி காலத்தில் இருந்தே சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தை கொண்டு இருந்தவர் பா ரஞ்சித்.

அதன்படி இயக்குனர் சிவ சண்முகத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் பா ரஞ்சித். அவருடன் இணைந்து தகப்பன்சாமி திரைப்படத்தில் பணியாற்றினார். பின்னர் வெங்கட் பிரபு அவர்களுடன் இணைந்து சென்னை 600028 படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் பா ரஞ்சித். 2012 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை திரைப்படமான அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பா ரஞ்சித்.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அட்டகத்தி திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து 2014 ஆம் ஆண்டு மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது. பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்ளை வைத்து கபாலி மற்றும் காலா ஆகிய படங்களை இயக்கினார்.

இயக்குனராக மட்டுமல்லாமல் நீலம் ப்ரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி பரியேறும் பெருமாள், ஜே பேபி போன்ற படங்களை தயாரித்து உள்ளார் பா ரஞ்சித். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் திரைக்கு வர இருக்கின்றது. இந்த படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா ரஞ்சித் பார்வையாளர்களிடம் ஆவேசமாக பேசி கேள்விகளை கேட்டு உள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால், நாங்க பரியேறும் பெருமாள் படம் எடுக்கிறோம். அந்த படம் எல்லாருக்கும் புடிச்சிருக்கு. நல்லா ஓடுது. ஏன்னா அந்த படத்துல ஹீரோ திருப்பி அடிக்கல. ஆனா அதே மாதிரி கர்ணன், மாமன்னன் படத்தை எடுக்கிறோம். அந்த படத்துல ஹீரோ அநீதியை திருப்பி கேட்கிறான். ஆனா அந்த படம் பிடிக்கலைன்னு சொல்றீங்க. உங்களுடைய பார்வை எப்படி இருக்கு? இந்த சமூகம் எப்பதான் மாறப்போகிறது? உங்களை நீங்களே எப்போ மாத்திகிட்டு கேள்வி கேட்க போறீங்க என்று ஆவேசமாக பார்வையாளர்களிடம் கேள்விகளை கேட்டுள்ளார் பா ரஞ்சித்.

மேலும் உங்களுக்காக...