ஒரு மணி நேரத்துக்கு ரூ.4,000.. ஒரு நாளைக்கு ரூ. 28,000 சம்பளம்.. என்ன வேலை தெரியுமா?

Published:

தற்போது உலகம் முழுவதும் ஐடி துறைகளில் AI ஆதிக்கம் வந்த பிறகு பல இலட்சம் இளைஞர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் உலகம் முழுவதிலும் புகழ்பெற்ற ஐடி கம்பெனிகள் தங்களது பணியாட்களை வீட்டுக்கு அனுப்பி விடுகின்றன. இப்படி ஐடி துறைகளில் வேலை என்பதே தற்போது குதிரைக் கொம்பாக இருக்கும் சூழலில் தற்போது பிரபல எலட்ரானிக் கார் தயாரிப்பு நிறுவனமான TESLA தற்போது பணியாட்களை வேலைக்கு அமர்த்த உள்ளது.

உலகின் பிரபல பில்லியனரும், தொழிலதிபருமான எலான்மஸ்க் நிறுவனமான TESLA எலட்க்ட்ரிக் கார் உற்பத்தி, புதுபிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டு உலகின் மிகப்பெரும் தொழில் நிறுவனமாக விளங்கி வருகிறது. தற்போது டெஸ்லா ஆலையில் Data Collection Operator என்ற பணிக்கு ஆட்களை அமர்த்த உள்ளது அந்நிறுவனம். இந்தப் பணியின் தன்மை என்னவெனில் ரோபோக்களை நாள் முழுவதும் கண்காணித்து தரவுகளை சேகரிக்கும் பணியாகும்.

படிப்பு முக்கியம் சிதம்பரம்.. மூன்று டிகிரி முடித்து நான்காவது டிகிரிக்குத் தயாராகும் காமெடி நடிகர்..

தினமும் 7 மணிநேரம் ரோபோக்களுடன் செலவிட்டு அதன் செயல்பாடுகள் குறித்த தரவுகளை சேகரிக்க வேண்டும். மேலும் இதற்கென தனியாக பிரத்யேக உடை வடிவமைக்கப்பட்டு அந்த உடையணிந்து VR உபகரணங்களை மாட்டி பணியாற்ற வேண்டும். இந்த வேலைக்கான சம்பளத்தைக் கேட்டால் இப்பவே அப்ளிகேஷன் போடத் தோன்றும். அதாவது ஒரு மணிநேரத்திற்கு சுமார் ரூ.4000 ரூபாயும், ஒரு நாளைக்கு ரூ. 28000 சம்பளமும் வழங்கப்பட உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு பற்றிய கூடுதல் விபரங்களை டெஸ்லாவின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன எலான் மாஸ்க் கூட வேலை செய்ய தயாராகிட்டீங்களா?

மேலும் உங்களுக்காக...