பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு காரணம் வீரமா, காதலா?

Published:

என்ன இது பட்டி மன்ற தலைப்பு போல் அல்லவா உள்ளது என்கிறீர்களா? ஆனால் அதுவல்ல. இது ஒரு பிரபலம் பேசிய உரை. அதிலிருந்து ஒரு சில துளிகள் உங்கள் பார்வைக்கு…

பொன்னியின் செல்வன்  படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்டது. அந்த வெற்றியைத் தொடர்ந்து இன்று அதன் 2ம் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Manirathnam
Manirathnam

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்குக் காரணம் காதலா, வீரமான்னு சொன்னாங்க. இரண்டும். பேர் உதாரணம் டைரக்டர். அவருக்கு பொன்னியின் செல்வன் மேல இருந்த காதல் என்னன்னு தெரியும். இது ஒரு மும்முனைக் காதல். நானும் காதலன். அந்தக் காதல்… அதைத் தொடர்ந்து வீரமாகவும் மாற்றிக் காட்டினார். அதுக்கு வேணும். இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதற்கு தைரியம் வேணும். சுபாஸ்கரனுக்கு அந்த தைரியம் வேணும்.

போர் முனைங்கறது மணிரத்னம் இருந்த இடம் தான் போர்முனை. அதைப் பார்க்கும்பொழுது எனக்கு பெருமையாக இருக்கிறது. வீரமும் வென்றிருக்கிறது. காதலும் வென்றிருக்கிறது என்பது தான் என்னுடைய தீர்ப்பு. இது ரெண்டும் இல்லாமல் தமிழ் கலாசாரம் கிடையாது. அதற்குப் பிறகு தான் பக்தி மார்க்கம் எல்லாம். காதலும் வீரமும் தான் நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

Ishwaryarai
Ishwaryarai

அதுக்கு உதாரணம் இங்கு இருக்கும் மணிரத்னம், ரகுமான் மட்டுமல்ல. இங்கு இருக்கும் ஐஸ்வர்யா ராய் உலக அழகி என்பதை மீண்டும் ஒருமுறை எங்களுக்கு இந்தப் படத்தின் மூலம் நிரூபிச்சது மணிரத்னம் தான். இதுல ஜட்ஜ் அவருதான் என்கிறதால ரொம்ப அற்புதமா பண்ணிருக்காரு. விக்ரம்கிட்ட தனியாகவே சொல்லி பேசிட்டேன் அவரோட பாராட்டுகளை.

ரொம்ப அற்புதமா இருந்தது. கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா இவங்கள்லாம் அந்த இடத்துக்கே நம்மைக் கொண்டு போயிட்டாங்க. யாராவது ஒருவர் பிழையாகச் செய்திருந்தாலும் அந்தக் கனவு கலைஞ்சிடும். அந்தக் கனவை கலையா வண்ணம் இரு பாகங்களையும் எடுத்துள்ளார்கள். இது சோழர்களுக்கு மட்டுமல்ல. தமிழ்சினிமாவுக்கும் பொற்காலம் தான்.

Kamal1
Kamal1

பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தான் கமல் இவ்வாறு பேசினார்.

மேலும் உங்களுக்காக...