ரோட்டுக் கடையில் தினமும் 40 ஆயிரம் வருமானம்.. திடீர் வைரலான குமாரி ஆன்ட்டி.. இங்க அப்படி என்ன ஸ்பெஷல்?

Published:

பைவ் ஸ்டார்களே தோற்று விடும் அளவிற்கு இப்போது ஹைதராபாத் நகர பிரபலங்களின் முக்கிய ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது குமாரி ஆண்ட்டி ஹோட்டல். நீங்கள் நினைப்பது அப்படி ஒன்றும் பிரமாண்டான கட்டிடம் கிடையாது. சர்வர் கிடையாது. சொல்லப் போனால் அமர்ந்து சாப்பிட சேர் கூட இல்லை. ஆனால் இன்று குமாரி ஆண்ட்டி இந்தியாவின் வைரல் பெண்மணி. அப்படி என்ன இருக்கிறது இவரிடம்? எதற்காக
தெலுங்கானா மாநிலமே இப்போது இவரைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறது?

தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்தான் சாய் குமாரி. ஹைதராபாத் நகரின் மாதப்பூர் பகுதியில் சாலையோரத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்ஸ்ட்டாகிராம் ரீல்ஸ்-க்காக ஒருவர் இவரது உணவகத்தை வீடியோவாக எடுத்துப் பதிவிட வைரல் ஆனால் இந்த சாய் குமாரி.

தங்கப்பதக்கம் திரைப்படம் உருவான வரலாறு.. முக்கிய காரணமாக அமைந்த செந்தாமரை
தனது உணவகத்தில் சிக்கன் வறுவல், சில்லி சிக்கன், குடல் கறி, மீன்குழம்பு, மீன் ப்ரை என நாக்குச் சொட்ட வைக்கும் அசைவ உணவுகளைத் தயார் செய்து விற்க இவரது கடை பிரபலம் ஆனது. தொடர்ந்து இவர் கடையை நோக்கி யூடியூப் சேனல்கள் படையெடுத்து ரிவியூ போட அவர்களுக்கும் ஏராளமான பார்வைகள் கிடைத்தது.

இதனால் ஒரேநாளில் ஓஹோவென புகழ்பெற்ற சாய்குமாரியின் உணவகத்தை குமாரி ஆண்ட்டி என்று அழைக்கத் தொடங்கினர். இந்த உணவகம் பற்றிக் கேள்விப்பட்ட பல முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் என பலரும் இங்கு வந்து உணவருந்த குமாரி ஆன்ட்டி உணவகம் தெலுங்கானா முழுவதும் பரவியது. இதனால் டிஜிட்டல் மீடியாக்களின் பார்வை இவரின் சமையல் முறையை வீடியோவாக எடுத்துப் போட இன்னும் பிரபலம் அடைந்தார்.

தினமும் மதியம் மட்டுமே உணவு சமைத்து எடுத்து வரும் இந்த ஹோட்டலில் சாப்பிட தினமும் ஏராளமானோர் வருகை தருவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட ஆரம்பித்தது. மேலும் இவருக்கும் லாபம் அதிகரிக்க தினசரி 40 ஆயிரம் வரை சம்பாதிக்க ஆரம்பித்தார். இதுமட்டுமின்றி புதிதாக பணியாட்களையும் நியமித்தார்.

போட்டோ எடுக்க டைரக்டரிடம் பெர்மிஷன் வாங்கச் சொன்ன ரஜினி.. இப்படி ஒரு தொழில் பக்தியா?

போக்குவரத்து நெரிசலால் செய்வதறியாது திகைத்த போலீசார் இவரது கடையை மூடச்சொல்லி உத்தரவு போட்டனர். ஒரே ஒரு வீடியோவால் வந்த வினையா என்று குமாரி ஆன்ட்டி புலம்பித் தள்ள அவரது கஸ்டமர்களுடன் ரோட்டில் இறங்கினார். மேலும் இவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்க இப்பிரச்சினையை மாநில அரசு கையில் எடுத்தது.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் கவனத்திற்கு குமாரி ஆண்ட்டி விஷயம் செல்ல அவர் போக்குவரத்து டிஜிபியிடம் இவர் மீது எந்த வழக்கும் பதிய வேண்டாம். மேலும் கடையையும் மூட வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறார். இதனால் குமாரி ஆண்ட்டி தற்போது மகிழ்ச்சி அடைந்து ரேவந்த் ரெட்டி வாழ்க என கோஷமிட்டு வருகிறார். திறமை இருந்தால் வெற்றி தேடி வரும் என்பதற்கு குமாரி ஆன்ட்டியின் வெற்றிக் கதையும் ஓர் நல்ல உதாரணம்.

மேலும் உங்களுக்காக...