ரகுவரனின் இறுகிய மனதை இளக வைத்த தல அஜீத்… அப்படி என்ன நடந்தது?

By Sankar Velu

Published:

வில்லன் நடிகர்களில் தனி ஸ்டைல் மற்றும் லுக்குடன் இருந்தவர் ரகுவரன். இவரது ஆங்கிலப்புலமை வியக்க வைக்கும். உச்சரிப்பு, நடை, உடை, பாவனைகள் என எல்லாவற்றிலும் தேர்ந்த நடிகராக இருந்தார். ரஜினியுடன் போட்டி போட்டுக் கொண்டு பாட்ஷாவில் நடித்து இருந்தார். இதை இன்று வரை யாராலும் மறுக்க முடியாது.

இவரது படங்களை ஹீரோவுக்கு இணையாக வைத்து பார்க்கும் ரசிகர்களும் உண்டு. அதே நேரத்தில் இவர் குணச்சித்திர வேடத்திலும் கலக்கினார். வில்லனாக இருந்து குணச்சித்திர நடிகராக வந்து நடித்த நடிகர்களில் ரகுவரன் முற்றிலும் மாறுபட்டவர்.

Raguvaran
Raguvaran

அன்பான சகோதரன், நண்பன், தந்தை என குணச்சித்திர கேரக்டர்களிலும் வெளுத்து வாங்கினார். சம்சாரம் அது மின்சாரம் படத்தில் அவரது நடிப்பு பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. வில்லன் நடிகர்களில் மிகவும் அழகானவர். இவர் சிகரெட்டை ஸ்டைலாக ஊதித்தள்ளுவதே தனி அழகு தான்.

துரதிர்ஷ்டவசமாக, அவர் போதைப்பொருளுக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டார். அவருடன் பழகிய சில சக நடிகர்கள் குடிக்கு அடிமையான போதும் ரகுவரனுடன் பழகுவதில் இருந்து கொஞ்சம் விலகியே இருந்தனர். இதனால் ஓட்டல் அறைகளில் தனிமையில் இருந்து மது மற்றும் சிகரெட் பழக்கத்தில் ஈடுபட்டு தனது மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வாராம்.

Amarkkalam
Amarkkalam

இருந்தாலும், அவரது நெருங்கிய நண்பர்கள் அவரை ஒரு பணிவான மற்றும் அக்கறையுள்ள நபர் என்றே பாராட்டுகிறார்கள். மேலும் அவரது வாழ்க்கையில் அவரது ஒரே பிரச்சனை அவரது போதைக்கான அடிமைத்தனம் என்றும் அவர்கள் தெரிந்து கொண்டனர்.

ஒருமுறை, தமிழ் சினிமாவிலும் அதன் நடிகர்கள் மத்தியிலும் இல்லாத ஒரு வினோதமான சம்பவம் நடந்தது. ரகுவரன் ஒரு பிரபலமான உணவகத்திலிருந்து தனது காரை நோக்கி விரைந்தார். அப்போது ஒரு சில நிருபர்கள் அவரைத் தொடர்ந்து பேசிப் பார்த்தனர்.

Ragu
Ragu

ஆனால் அவர் அவர்களிடம் எரிந்து விழுந்தார். தனது ரசிகர்களைக் கூட அவர் அதிகமாகக் கண்டு கொள்வதில்லை. அவர்களிடம் இருந்து விலகியே இருந்தார்.

2000த்தில் அவருக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக தல அஜீத்துடன் நடித்த சூப்பர்ஹிட் படம் ஒன்று வெளியானது. அது தான் முகவரி. படப்பிடிப்பில் அவர் அஜித்துடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்தினார்.

Ajith and Raguvaran
Ajith and Raguvaran

அஜீத் ஒரு பேட்டியில் ரகுவரனைப் பற்றி இவ்வாறு சொல்கிறார். புகழ் மற்றும் வெற்றியை எவ்வாறு கையாள்வது என்பதை எனக்கு சொல்லித் தந்தவரே ரகுவரன் தான் என்கிறார். ரகுவரனும், அஜீத்தும் அமர்க்களம், முகவரி படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியவர். இவருக்கு பாட்ஷா, முதல்வன், ரட்சகன், முகவரி, சம்சாரம் அது மின்சாரம் படங்களில் செம மாஸ் அந்தஸ்தைப் பெற்றுத் தந்தன.