பெரும் நஷ்டத்திலிருந்த சரத்குமார்.. ராதிகா என்ன செய்தார் தெரியுமா?

Published:

தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். ஆரம்பகாலத்தில் பத்திரிக்கை நிரூபராக பணிபுரிந்தார் சரத். அதன் பிறகு தயாரிப்பாளராகத்தான் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். மிஸ்டர் கார்த்திக் என்ற படத்தை தயாரித்தார் முதன் முதலில்.

அந்தப் படத்தை கார்த்திக்கை வைத்து எடுத்தார். ஆனால் அந்தப் படம் சரியாக ஓடவில்லை. ஏகப்பட்ட லட்சங்களை இழந்தார். ஆனாலும் தயாரிப்பு பணியை விட்ட பாடில்லை. மீண்டும் ஒரு படத்தை எடுத்து அதுவும் தோல்வியை தழுவியது. அதன் பிறகு ஆக்டிங்கை கற்றுக் கொள்ள புனே, மும்பை என வெளி மாநிலங்களில் சென்று படித்தார்.

Sarathkumar

அதனையடுத்து செல்வமணி இயக்கத்தில் புலன் விசாரணை என்ற படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் ஒரு டாக்டராக நடித்திருப்பார் சரத்குமார். அது அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆனாலும் அதன் பிறகு வெளிவந்த பெரும்பாலான படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்தார்.

சூரியன் என்ற படம்தான் சரத்குமார் நடித்த முதல் ஹீரோ படம். அந்தப் படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அந்தப் படத்தின் வெற்றி பல இயக்குனர்களை சரத்தின் வீட்டின் முன் நிற்க செய்தது. இப்படி பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.

Sarathkumar Radhika

அதன் பிறகு ஒரு சீட் கம்பெனி விவகாரத்தில் சரத்குமார் சிக்கி பெரிய தொகை இழந்தாராம். அந்த சமயத்தில் தான் ராதிகா உதவி செய்திருக்கிறார். அதன் மூலம் தான் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். இப்போது வரை ஒரு ஆதர்ஷன தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த செய்தியை பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறினார்.

மேலும் உங்களுக்காக...