உங்களுக்கு என்ன பரிகாரம் பண்ணனும்னு தெரியலையா? அப்படின்னா இதைப் படிங்க முதல்ல..!

Published:

சிலர் நமக்கு மட்டும் ஏன் தான் இவ்ளோ சோதனையை ஆண்டவன் கொடுக்குறான்னு புலம்பித் தவிப்பாங்க. அவங்களுக்கு என்ன குணம் இருக்குன்னு அவங்களுக்கேத் தெரியாது. அதுக்கு என்ன செய்றதுன்னும் தெரியாது. கோவிலுக்குப் போவாங்க. ஆளோடு ஆளா கும்பிட்டு விட்டு வருவாங்க. சாமிக்கிட்ட என்ன கேக்குறதுன்னு கூட தெரியாது. ஆனா எல்லாரையும் போல பக்தி பழமா இருப்பாங்க.

ஆனா மனசுக்குள்ள புழுங்கித் தவிப்பாங்க. இவங்களை மாதிரி ஆள்களை நாம் பார்த்திருப்போம். அது சரி. நாம் எப்படிப்பட்டவர்கள்? நமது பிரச்சனையைத் தீர்க்க என்னென்ன பரிகாரங்கள் பண்ண வேண்டும் என்பதை சிம்பிளாகப் பார்க்கலாம்.

அதுக்கு முன்னாடி உங்க ஜாதகத்தை எடுத்து நீங்க எந்தக் கிழமையில பிறந்தீங்கன்னு தெரிஞ்சிக்கோங்க. இப்ப பார்க்கலாம் வாங்க…

ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்களுக்கு உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு கோபம், படபடப்பு இருக்கும். புறாக்களுக்கு கோதுமை தானம் கொடுக்கலாம். உங்களது பாவம் எல்லாம் தீர்ந்து நல்ல விமோசனம் கிடைக்கும்.

திங்கள் கிழமை பிறந்தவர்கள் மனதளவில் திருப்தியே இல்லாமல் இருப்பார்கள். நம்பிக்கை இல்லாத தன்மை இருக்கும். இவர்கள் பச்சரிசியைத் தானம் செய்யலாம். கோலமாவை பச்சரிசியில் வைத்துக் கொண்டு போடலாம். இதனால் எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கு பலனாக இருக்கும்.

செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் ரொம்ப பரபரப்பாக இருப்பாங்க. இவர்கள் எப்போது கோபப்படுவாங்கன்னு தெரியாது. ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும். இவர்கள் துவரம்பருப்பை நீரில் ஊறப்போட்டு பசுமாட்டுக்கு தானமாகக் கொடுக்கலாம்.

புதன்கிழமை பிறந்தவர்கள் ரொம்ப புத்திசாலித்தனமாக இருப்பார்கள். நமது தேவைகளைப் புரிந்து நமக்கு இதுதான் வேணும்னு செயல்படுவாங்க. மண்ணைப் பொன்னாக்கும் சாமர்த்தியசாலிகள். பச்சைப்பயறு, சுண்டல் செய்து தானமாகக் கொடுக்கலாம்.

வியாழக்கிழமை பிறந்தவர்கள் ரொம்ப நேர்மையானவர்களாக இருப்பார்கள். இவர்கள் பொய் சொன்னாலும் அதில் ஒரு காரணம் இருக்கும். அது நல்லதுக்காகத் தான் இருக்கும். மிகவும் கண்டிப்பானவர்கள். இவர்கள் தங்கள் கொள்கையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். கறுப்பு கொண்டைக்கடலை, சுண்டலைத் தானமாகக் கொடுக்கலாம்.

வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் ஐஸ்வர்யத்தை உடையவர்கள். இவங்க கஷ்டப்படலாம். ஆனால் இவங்க கையால ஒரு ரூபாயை மற்றவங்களுக்குக் கொடுத்தாங்கன்னா அவங்க நல்லா வளருவாங்க. மகாலெட்சுமி யோகத்தை உடையவர்கள். யோகமானவர்கள். நல்ல ஆரோக்கியமா இருக்கணும்னா மொச்சை தானம் நல்லது. பச்சை மொச்சையை தானமாக பசுமாட்டுக்குக் கொடுக்கலாம்.

Lazy girl 1
Lazy girl

சனிக்கிழமை பிறந்தவர்கள் சோம்பேறியாக இருப்பார்கள். வீட்டில் ரொம்ப சோம்பேறியாக இருப்பார்கள். சின்ன சின்ன வேலையைக் கூட சோம்பல்பட்டு செய்யமாட்டார்கள். உடலில் அடிக்கடி நல்லெண்ணையைத் தேய்த்துக் குளிக்க வையுங்கள். நல்லெண்ணை தானம் செய்வது நல்லது.

மேலும் உங்களுக்காக...