Vijayakanth: 1999 ஆம் வருடம் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் நடைபெற்றது. இந்த போரில் இந்தியாவிற்கு தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று நினைத்த விஜயகாந்த், நடிகர் நடிகைகள் அனைவரையும் ஒன்று திரட்டி மதுரையில் கலை நிகழ்ச்சி ஒன்று நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னணி பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். இதனால் ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் அங்கே கூடியது. நிகழ்ச்சி முடிந்து நடிகர் நடிகைகள் கிளம்பும் தருவாயில் ரசிகர்களின் கூட்டம் அலை மோதியதால் இங்கிருந்து ரயிலுக்கு சென்று விட்டால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் யாரும் சாப்பிடாமல் ரயிலில் ஏறி விட்டனர்.
இது பற்றி விஜயகாந்திற்கு பின்னர் தான் தெரிய வந்துள்ளது. அவர் சென்று பார்த்தபோது முன்னணி நடிகர் நடிகைகள் பசியின் வாடி போய் இருந்துள்ளனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் விசாரித்த விஜயகாந்த் ஒரு இடத்தில் ரயில் சிறிது நேரம் நிற்கும் என்பதையும் அங்கு ஒரே ஒரு பரோட்டா கடை இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டார்.
ரயில் குறிப்பிட்ட இடத்தில் நின்றவுடன் ஸ்டேஷன் மாஸ்டரை சென்று சந்தித்த விஜயகாந்த் 15 நிமிடம் ரயில் நிற்க வேண்டும் என கேட்டுள்ளார் அதற்கு. முதலில் ஸ்டேஷன் மாஸ்டர் அது முடியாத காரியம் இதனால் பல பிரச்சனைகள் ஏற்படலாம் என கூறியுள்ளார். அதற்கு விஜயகாந்த் நாட்டிற்காக அத்தனை பிரபலங்கள் வந்து இப்போது பட்டினியாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஸ்டேஷன் மாஸ்டர் மேலதிகாரிகளிடம் பேசிவிட்டு விஜய்காந்திடம் ஒப்புக் கொண்டுள்ளார். உடனடியாக பரோட்டா கடையை தேடி சென்ற விஜயகாந்த் மற்றும் அவர் தரப்பினர் கடையில் இருக்கும் பரோட்டாக்களை கட்டித் தருமாறு கேட்டுள்ளனர். விஜயகாந்த் பார்த்த மகிழ்ச்சியில் கேப்டன் நீங்களா என பேசத் தொடங்கியுள்ளார் கடையின் உரிமையாளர்.
ஆனால் விஜயகாந்த் இப்போது இதற்கெல்லாம் நேரமில்லை இருக்க பரோட்டாவை கட்டிக் கொடுங்கள் என்று வாங்கியுள்ளார் அதோட தனது பாக்கெட்டில் இருந்த பணத்தையும் அவர் கொடுக்க கடைக்காரர் வாங்க மாட்டேன் என மறுத்துள்ளார். ஆனாலும் இருந்த பணத்தை கொடுத்து விட்டு வேக வேகமாக சென்று ரயிலில் பட்டினியாக இருந்த பிரபலங்களுக்கு உணவு வழங்கினார்.
இயக்குனர் சொன்ன வார்த்தை.. விடியுறதுக்குள்ள கேப்டன் விஜயகாந்த் செஞ்ச உதவி.. அவரு மனுஷன் இல்ல, சாமி..
அதன் பிறகு தான் அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டது. தான் அழைத்து வந்தவர்கள் பட்டினியாக இருக்கிறார்கள் என்பது தெரிந்ததும் ரயிலை நிறுத்தி விஜயகாந்த் செய்த இந்த செயல் பலரது பாராட்டுக்களை பெற்றது.