ரெய்டு வந்த Income Tax அதிகாரிகள்.. கொஞ்சம் கூட பயப்படாம கேப்டன் விஜயகாந்த் செஞ்ச சம்பவம்.. எல்லாரும் ஆடி போயிட்டாங்க..

சினிமாவில் தனது ரசிகர்களுக்கு மட்டும் நடிகர் என இருக்காமல் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு ஹீரோவாக வாழ்ந்து வருபவர் விஜயகாந்த். தான் முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடிப்பதற்கு முன்பாக விஜயகாந்த் பட்ட கஷ்டங்கள் ஏராளம். திரைப்பட ஷூட்டிங்கின் போதே நிறைய அவமானங்களை கடந்து வந்த விஜயகாந்த், கடின உழைப்பால் முன்னணி ஹீரோவாக மாறி இருந்தார்.

அது மட்டுமில்லாமல், சினிமாவில் நடிப்பவர்கள் தொடங்கி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், கடைநிலை ஊழியன் என அனைவருமே சமமான உணவை உண்ண வேண்டும் என்றும் அனைவரும் சமமாக ஷூட்டிங்கில் நடத்தப்பட வேண்டும் என்றும் முதலில் முடிவு செய்து அதை நடப்பிலும் ஆக்கி பலரின் இதயத்தை வென்றவர் விஜயகாந்த். இது போக, சினிமாவில் பிரபலமாக இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக தவித்த போதும் ஓடிப் போய் செய்வார்.

இப்படி பல நல்ல குணம் கொண்ட விஜயகாந்த், ஆரம்பத்தில் குடும்ப கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடித்து வந்த விஜயகாந்த், பின்னர் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் படங்களிலும் அதிகம் நடிக்க ஆரம்பித்தார். இதனால், அவரது சண்டைக் காட்சிகளுக்கென்றே ஒரு ரசிகர் கூட்டமும் உருவாகியது. பெரும்பாலும் சண்டை காட்சிகளில் டூப் கலைஞர்களை வருத்தாமல், முடிந்தவரை சில ரிஸ்க் ஆக்ஷன் காட்சகளில் விஜயகாந்தே நடித்திருந்தார். அந்த அளவுக்கு அக்கறையோடு இருந்த விஜயகாந்த், கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஏறக்குறைய சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார்.

தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து முழுக்க முழுக்க தன்னை அரசியலில் ஈடுபடுத்தி வந்த விஜயகாந்த், எதிர்க்கட்சி தலைவராகவும் மாறி இருந்தார். இதனிடையே, உடல்நிலை சரியல்லாமல் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த், சமீபத்தில் மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருந்தார். அவர் முன்பு இருந்தது போல கம்பீரமாக திரும்பி வர வேண்டும் என்றும் தொண்டர்கள் வேண்டி வருகின்றனர்.

இந்த நிலையில், வருமானத் துறை அதிகரிகளையே விஜயகாந்த் பயமில்லாமல் எதிர்கொண்டது பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளது. விஜயகாந்திற்கு சினிமா துறையில் நெருங்கிய நண்பர் என்றால் மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் தான். விஜயகாந்த் நடிக்கும் படத்தின் கதை வரை இப்ராஹிம் தான் முடிவு செய்வார் என தெரிகிறது.

அந்த அளவுக்கு நெருங்கிய நண்பராக இருந்த ராவுத்தர் தான் விஜயகாந்தின் சொத்து விவரங்களையும் கவனித்து வந்தார். அப்படி இருக்கையில், ஒருமுறை விஜயகாந்த் வீட்டிற்கு Income Tax அதிகாரிகள் சோதனை நடத்துவதற்காக வந்தனர். அப்போது, விஜயகாந்தை தனியாக உட்கார வைத்த அதிகாரிகள், அவரது சம்பளம் மற்றும் சொத்து விவரங்கள் குறித்த கேள்விகளை கேட்க, அனைத்திற்கும் தெரியாது என்றே பதிலளித்தபடி இருந்தார்.
vijayakanth

மீண்டும் மீண்டும் அதே கேள்விகளை அதிகாரிகள் கேட்க கடுப்பான விஜயகாந்த், நாக்கை மடக்கியபடி ‘தெரியாதுனு சொல்லிட்டு இருக்கேன், திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்கே. வேற மாதிரி ஆயிடும்’ என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பின்னர் ராவுத்தர் பற்றி தெரிய வந்ததும் அதிகாரிகள் விஜயகாந்திடம் மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது.

இதை படித்ததும் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்த போது, ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவை எந்தவித பயமும் இல்லாமல் அங்கேயே நாக்கை மடக்கி கடித்து கேள்வி கேட்ட கேப்டனை தான் பலருக்கும் நினைவு வரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews