இயக்குனர் சொன்ன வார்த்தை… விடியுறதுக்குள்ள கேப்டன் விஜயகாந்த் செஞ்ச உதவி.. அவரு மனுஷன் இல்ல, சாமி..

தமிழ் சினிமாவில் இதுவரை உருவான ஹீரோக்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். ஆனால், படத்தில் மட்டும் ஹீரோவாக இருக்காமல் நிஜ வாழ்க்கையிலும் அப்படி வாழ்ந்த நடிகர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மறைந்த நடிகர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், சினிமாவில் இருந்து பெரிய ஆளாக வெற்றி பெற்று அரசியலில் நுழைந்து மக்கள் நாயகனாகவும் மாறி இருந்தார். முதலமைச்சராக எம்ஜிஆர் செய்த உதவி, கடைக்கோடி மக்களுக்கு வரை பயன்படும் வகையில் இருந்தது.

அவரை போலவே, மிக உயர்ந்த நிலையில் வந்திருக்க வேண்டிய ஒருவர் தான் விஜயகாந்த். கேப்டன் என அறியப்படும் விஜயகாந்த், சினிமாவில் நுழைந்த காலத்தில் பட்ட கஷ்டங்கள் ஏராளம். தொடர்ந்து கடின உழைப்புக்கு மேற்கொண்டு, முன்னணி நடிகராக மாறியதுடன் தான் சந்தித்த அவலங்கள் மற்ற யாரும் சந்தித்து விடக்கூடாது என சினிமாவில் உள்ள அனைவரையும் சமமாக பார்த்தார்.

தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், சினிமா பிரபலங்கள் என யாருக்கு என்ன உதவியாக இருந்தாலும் முதல் ஆளாக நிற்கும் விஜயகாந்த், தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலிலும் நுழைந்தார். தமிழகத்தின் முதலமைச்சராகி இன்னும் நிறைய நல்ல காரியங்கள் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அவரது உடல்நிலை அவரை அப்படியே தலைகீழாக மாற்றியது. கடந்த சில ஆண்டுகளாகவே பொது இடங்களில் அதிகம் வராமல் இருக்கும் விஜயகாந்த், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Captain Vijayakanth

நல்ல மனம் படைத்த விஜயகாந்திற்கு இப்படி ஒரு நிலை வந்துள்ளது பலரையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு மத்தியில், முன்பு ஒரு முறை விஜயகாந்த் செய்த உதவி குறித்த செய்தி பலரையும் மனம் நெகிழ வைதுள்ளது. இது தொடர்பாக பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் ஒரு பேட்டியில் பேசுகையில், “கள்ளழகர் படப்பிடிப்பின் போது நான் செய்தித்தாளை படித்து கொண்டிருந்தேன். அப்போது அதில், யாருக்கோ 4 லட்ச ரூபாய் உதவி தேவை என்று இருந்தது. என் அருகே விஜயகாந்த் சாப்பிட்டு கொண்டிருந்தார்.

அந்த செய்தி பற்றி கேட்டு தெரிந்து கொண்ட விஜயகாந்த், மறுநாளே சம்மந்தப்பட்ட நபர்களுக்கு 4 லட்ச ரூபாய் கொடுத்து உதவி செய்தார். 1997 – 98 சமயத்தில் 4 லட்சம் என்பது மிகப்பெரிய தொகை. எப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் அவர். இதனால் தான் மக்கள் அவரை அந்த அளவுக்கு போற்றினார்கள்” என பெருமிதத்துடன் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார். இது தவிர இன்னும் முகம் தெரியாத பலருக்கு விஜயகாந்த செய்த உதவி எண்ணிலடங்காதது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.